ETV Bharat / state

போலீசாரை தாக்கி தப்பியோட முயன்றவர் சுட்டு பிடிப்பு - போலீசார் அதிரடி! - கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த நபர்

திருவாரூரில் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த நபர் போலீசாரை தாக்கிவிட்டு தப்பிக்க முயன்ற போது போலீசார் அவரை துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர்.

Police shot and caught a man who attacked the police in Tiruvarur
திருவாரூரில் போலீசாரை தாக்கிவிட்டு தப்பியோடிய நபரை போலீசார் சுட்டு பிடித்தனர்
author img

By

Published : Mar 12, 2023, 1:13 PM IST

திருவாரூரில் போலீசாரை தாக்கிவிட்டு தப்பியோடிய நபரை போலீசார் சுட்டு பிடித்தனர்

திருவாரூர்: கொரடாச்சேரி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியான கமலாபுரத்தில் ராஜ்குமார் என்பவரது கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட நபர்கள் ஆறு பேரை போலீசார் ஏற்கனவே கைது செய்திருந்தனர். இந்த நிலையில் தலைமறைவாக இருந்த பிரவீன் என்பவரை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் அவரை பிடிக்க முயன்றபோது பிரவீன் தான் மறைத்து வைத்திருந்த ஆயுதத்தால் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் இளங்கோவை தாக்கிவிட்டு தப்பி ஓட முயன்றுள்ளார்.

இதனால் போலீசார் பிரவீனை முழங்காலுக்கு கீழ் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். இதனை அடுத்து சுடப்பட்ட பிரவீன் மற்றும் காயமடைந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் இளங்கோ ஆகிய இருவரும் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்நிலையில் திருவாரூர் மாவட்ட எஸ்.பி சுரேஷ்குமார் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு வருகை தந்து காயமடைந்த சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் இளங்கோவை சந்தித்து ஆறுதல் கூறியதோடு நடந்த சம்பவத்தை பற்றி விசாரணை மேற்கொண்டார். பின்னர் இது பற்றி எஸ்.பி சுரேஷ் குமார் கூறுகையில் தலைமறைவாக இருந்த கொலை வழக்கில் தேடப்பட்ட பிரவீனை கைது செய்ய முயன்ற போது, அவர் போலீசாரை தாக்கி விட்டு தப்பி ஓடிய நிலையில் முழங்காலுக்கு கீழ் சுட்டு போலீசார் பிடித்ததாக தெரிவித்தார்.

தமிழகத்தில் குற்ற சம்பவங்களை தடுக்க செல்லும் காவலர்கள் மீது குற்றவாளிகள் தாக்குதல் நடத்துவது, கைது செய்ய சென்ற போலீசாரை தாக்குவது போன்ற சம்பவங்கள் சமீப காலமாக அதிகரித்து வந்தன. ஆலந்தூரில் தவறை தட்டிக்கேட்கச் சென்ற ஆயுதப்படை காவலர் விஜயன் என்பவரை ஒரு கும்பல் தாக்கியதில் பலியானார். எழும்பூரில் காவலர் மீது தாக்குதல், போன்ற சம்பவங்களும் நடந்தன.

இதனை தடுப்பதற்காக குற்றவாளிகளை பிடிக்கும் போது காவல்துறையினர் கட்டாயம் துப்பாக்கி கொண்டு செல்ல வேண்டும் எனவும் குற்றவாளிகள் தாக்கும் போது துப்பாக்கி பயன்படுத்த தயங்க கூடாது என்றும் டிஜிபி சைலேந்திரபாபு சமீபத்தில் உத்தரவிட்டிருந்தார். இதனால் போலீசார் தற்காப்புக்காக குற்றவாளிகளை துப்பாக்கியால் சுடும் சம்பவமும் அவ்வப்போது நடந்து வருகிறது.

கோவை நீதிமன்றம் அருகே கொலை செய்யப்பட்ட வழக்கில் இரண்டு நபரை உதவி ஆய்வாளர் இருளப்பன் காலில் சுட்டு கைது செய்தார். அதேபோல் திருச்சியில் இரண்டு குற்றவாளிகளிடம் இருந்த நகைகளை மீட்க சென்ற இரு காவலர்கள் மற்றும் காவல் ஆய்வாளர் ஆகியோரை வெட்டிவிட்டு தப்பிக்க முயன்றவரை போலீசார் தற்காப்புக்காக காலில் சுட்டு கைது செய்தனர்.

இதே போல் தூத்துக்குடியில் வழக்கறிஞர் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்தவரை போலீசார் கைது செய்ய சென்ற போது அவர் இரண்டு போலீசாரை தாக்கி விட்டு தப்பிக்க முயற்சித்தார். அப்போது அவரை போலீசார் சுட்டு பிடித்தனர். போலீசார் மீது ரவுடிகள் தாக்குதல் நடத்தி வந்த நிலையில் தற்போது போலீசார் தற்காப்பிற்காக சுடுவதற்கு தயாராகியுள்ளதால் குற்றவாளிகளின் கொட்டம் அடங்கும் என்று பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

இதையும் படிங்க: தூத்துக்குடி வழக்கறிஞர் கொலை வழக்கு: தப்பிக்க முயன்றவரை சுட்டுப் பிடித்த போலீசார்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.