திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் தாலுகா வடபாதிமங்கலம் அருகே உள்ள வேற்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபாகரன். இவருக்கு செந்தமிழ்ச்செல்வி என்ற மனைவியும் குகன்ஷா என்ற மகளும் உள்ளனர். கடந்த வருடம் ஏற்பட்ட கஜா புயலின் போது இவரது வீடு சேதமடைந்தள்ளது. இவரது வீட்டை சீரமைக்க விடாமல் அருகில் வசிக்கும் சிலர் தடுத்து வந்துள்ளனர்.
இதனால், கடந்த ஓராண்டாக தனது மனைவி, குழந்தையுடன் மாட்டுக்கொட்டகையில் வசித்து வந்துள்ளார். இதுகுறித்து காவல் துறையிடம் பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில், நவம்பர் 11ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்த பிரபாகரன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். பிரபாகரனை மீட்ட காவல் துறையினர் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். ஒரு வார காலமாக அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இதையும் படிங்க: ஃபேஸ்புக்கில் லைவ்-ஆக தற்கொலைக்கு முயன்ற இளைஞர்