திருவாரூர் மாவட்டம் முழுவதும் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள் குறுவை சாகுபடி செய்து வருகின்றனர். தற்போது ஒரு சில பகுதிகளில் குறுவை அறுவடை பணிகள் முடிந்துள்ளன.
குறிப்பாக திருவாரூர், தப்பளாம்புலியூர், காட்டூர், மடப்புரம், இளவங்கார்குடி, பெரும்புகலூர் உள்ளிட்ட பகுதிகளில் அறுவடை பணிகள் நடைபெற்று வருகின்றன. விவசாயிகளுக்கு அறுவடை செய்வதற்காக திருவாரூர் வேளாண் பொறியியல் துறை மூலம் அறுவடை இயந்திரங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
ஆனால் தற்போது மாவட்டம் முழுவதும் இரண்டு கிளாஸ் அறுவடை இயந்திரம், மூன்று டயர் அறுவடை இயந்திரங்கள் என ஐந்து மட்டுமே உள்ளன. இதனால் விவசாயிகள் வேளாண் பொறியியல் துறையில் விண்ணப்பித்தாலும் உரிய நேரத்திற்கு இயந்திரங்கள் கிடைக்கவில்லை என குற்றஞ்சாட்டு எழுந்துள்ளது.
மேலும் அந்த இயந்திரங்களும் அடிக்கடி பழுதடைந்துபோவதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர். தனியார் அறுவடை இயந்திர உரிமையாளர்கள் இதைப் பயன்படுத்திக் கொண்டு விவசாயிகளிடம் ஏக்கருக்கு 3000 முதல் 3500 ரூபாய் வரை கேட்பதால் விவசாயிகள் கவலையடைந்தள்ளனர்.
எனவே மாவட்ட நிர்வாகமும் வேளாண்துறை நிர்வாகமும் கூடுதலாக அறுவடை இயந்திரங்களை பெற்று தர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: நெல் கொள்முதல் செய்யப்படாததால் விவசாயிகள் வேதனை