திருவாரூர்: நன்னிலம் அருகே குடவாசலில் இருந்து நன்னிலம் நோக்கி 30க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசுப் பேருந்து சென்றுள்ளது. அப்போது சலிப்பேரி என்ற இடத்தில் அரசுப் பேருந்து அதிவேகமாக வந்ததால் கட்டுப்பாட்டை இழந்த சாலை ஓர புளியமரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் ஓட்டுநர்,நடத்துனர், பேருந்தில் பயணித்த சிறியவர்கள்,பெண்கள உட்பட 30 பேர் படுகாயம் அடைந்தனர் . பின்னர் இச்சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த நன்னிலம் போலீசார் காயம் அடைந்தவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் நன்னிலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: சாலை விபத்தில் 7 பேர் உயிரிழப்பு, 4 பேர் படுகாயம்!