ETV Bharat / state

தமிழ்நாடு முழுவதும் போராட்டம் - தட்சிண ரயில்வே எம்ப்ளாயிஸ் யூனியன் அறிவிப்பு

கரோனாவை காரணம் காட்டி ரயில்வே சலுகைகளை பறித்துள்ள மத்திய அரசை கண்டித்து பிப்ரவரி 1ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என தட்சிண ரயில்வே எம்பிளாயிஸ் யூனியன் அறிவித்துள்ளது.

Dakshin Railway Employees Union
Dakshin Railway Employees Union
author img

By

Published : Jan 29, 2021, 1:23 PM IST

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த தட்சிண ரயில்வே எம்ப்ளாயிஸ் யூனியன் அமைப்பின் மாநில பொதுச்செயலாளர் ஜானகிராமன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.

அப்போது பேசிய அவர், கரோனா ஊரடங்கை காரணம் காட்டி மத்திய அரசு ரயில்வே துறையில் உள்ள அத்தனை சலுகைகளையும் பரித்துள்ளது. ரயில்வே துறையை தனியார் மயமாக்க தேவையான நடவடிக்கைகளை இந்த கரோனா காலகட்டத்தில் மத்திய அரசு எடுத்து வருகிறது.

ரயில்வே துறையை தனியார் மயமாக்க மக்களையும் ரயில்வே ஊழியர்களையும் தயார் படுத்தும் வகையில் கரோனா பெயரை சொல்லி நடைமேடை டிக்கெட் கட்டணம் 50 ரூபாய் உயர்த்தியுள்ளது. இது தற்போதும் நடைமுறையில் உள்ளது.

புறநகர், விரைவு உள்ளிட்ட எந்த ரயில்களிலும் தகுந்த இடைவெளி உள்ளிட்ட கரோனா கட்டுப்பாடுகள் பின்பற்றப்படாத நிலையில், முன்பதிவு செய்தால் மட்டுமே ரயில்களில் பயணிக்கும் தற்போதைய முறையை மத்திய அரசு கைவிட்டு முன் பதிவில்லா பெட்டிகளில் செல்ல அனுமதி அளிக்க வேண்டும்.

கரோனாவை காரணம் காட்டி மூத்த குடிமக்கள், மாணவர்கள் என பயணிகளின் சலுகைகள் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் நாடு முழுவதும் உள்ள 550 ரயில் நிலையங்கள் தனியார் மயமாக்கப்பட்ட உள்ளதாகவும், இதன் மூலம் பயணிகள், மாணவ மாணவிகள், தியாகிகள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட பலதரப்பட்ட மக்களுக்கு வழங்கும் சலுகைகள் முற்றிலும் ரத்தாகி ஏழை, எளிய மக்கள் ரயில் சேவையை பெறமுடியாத சூழல் உருவாகும்.

ரயில்வே நடைமேடை டிக்கெட் விலையை குறைக்க வேண்டும், ரயில்களில் பெட்டிகளில் பயணிகளை அனுமதிக்க வேண்டும், ரயில்வே துறையை தனியார் மயமாக்களை மத்திய அரசு கைவிட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தட்சிண ரயில்வே எம்பிலாயிஸ் யூனியின் சார்பில் பிப்ரவரி 1ஆம் தேதி தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட பகுதிகளில் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தார்.

இதையும் படிங்க:"நம்ம CHENNAI" அடையாளச் சிற்பமா? தமிழை அவமதிக்கும் சின்னமா? - வைகோ கண்டனம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.