ETV Bharat / state

குப்பைக் கிடங்கை இடமாற்றம் செய்யக்கோரி பறை அடித்து ஆர்ப்பாட்டம் - CPIM protest to move garbage in tiruvarur

திருவாரூர் : முத்துப்பேட்டை பேரூராட்சி குப்பைக் கிடங்கை இட மாற்றம் செய்யக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் பறை அடித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

CPIM protest to move garbage in muthupettai

author img

By

Published : Jun 19, 2020, 12:02 PM IST

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அருகே ஆலங்காடு கிராம எல்லைப் பகுதியில் பேரூராட்சி குப்பைக்கிடங்கு பல ஆண்டுகளாக உள்ளது. சமீப காலமாக இங்கு அதிக அளவில் குப்பைக் கொட்டப்படுவதால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதனால் குப்பைக் கிடங்கை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் (ஜூன் 17) முத்துப்பேட்டை பேரூராட்சி குப்பைக் கிடங்கு எதிரே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பேரூராட்சி குப்பைக் கிடங்கை இடமாற்றம் செய்யக்கோரி பறை அடித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

நகரச் செயலாளர் செல்லத்துரை தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் தமிழ் மணி, மாவட்ட குழு உறுப்பினர் கே.வி.ராஜேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டு தமிழர்களின் பாரம்பரிய இசைக்கருவியான பறையை அடித்து கோஷங்களை எழுப்பினர். இந்த ஆர்பாட்டத்தில் பொது மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க... குப்பைக் கதை! கரோனாவால் கலங்கும் 'கந்தல் சேகரிப்பாளர்கள்'

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.