திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களைச் சேர்ந்த கரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நபர்கள் சிகிச்சைப் பெற்று வந்தனர். இதில், திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 32 நபர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர்.
இதையடுத்து, வைரஸ் பாதிக்கப்பட்ட நாளிலிருந்து 14 நாட்களுக்கு பிறகு அவர்களுக்கு மீண்டும் இரண்டு முறை ரத்தப் பரிசோதனை செய்து அதில் கரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை என்றால், மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படுவது வழக்கம்.
இந்நிலையில், திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 32 நபர்களில் ஏற்கனவே 29 நபர்கள் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதையடுத்து, திருவாரூரைச் சேர்ந்த மூவர் அம்மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் இன்று வீடு திரும்பியுள்ளனர்.
இதனால், கரோனா இல்லாத மாவட்டமாக திருவாரூர் மாறியது என அம்மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் முத்துக்குமரன் தெரிவித்தார்.
இதையும் படிங்க: மாட்டு வண்டியில் 1000 கி.மீ. பயணம் - உ.பி. தொழிலாளியின் சோக பின்னணி!