ETV Bharat / state

திருவாரூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் - Corona virus

திருவாரூர்: குடும்ப அட்டைதாரர்களுக்கு கரோனா நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Communist Party of India protest
CPI Thiruvarur
author img

By

Published : Jul 23, 2020, 4:03 PM IST

திருவாரூர் மாவட்டம் கச்சனம் பேருந்து நிலையம் முன்பு இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 200க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின்போது அவர்கள் கூறுகையில் ”ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரணமாக 7 ஆயிரத்து 500 ரூபாய் வழங்கிட வேண்டும். கிராமங்களில் உள்ள குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருள்கள் அனைத்தும் இலவசமாக வழங்கிட வேண்டும்.

சிலிண்டர் இணைப்புகள் உள்ள அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் இலவசமாக சிலிண்டர் வழங்கிட வேண்டும். அனைத்து வீடுகளுக்கும் மின்சார கட்டணத்தை அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும். தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை 250 நாள்களாக உயர்த்தி கூலியை 500 ரூபாய் உயர்த்தி வழங்க வேண்டும்” உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க: மின் கட்டண உயர்வை கண்டித்து நூதன போராட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.