மேல்நிலை முதலாம் ஆண்டு படிக்கும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டுவருகிறது.
அதன் தொடர்ச்சியாக திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் நேற்று(ஜன.5) பள்ளி, மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சாந்தா கலந்துகொண்டு 3 ஆயிரத்து 605 மாணவ, மாணவிகளுக்கு மிதிவண்டிகளை வழங்கினார்.
நிகழ்ச்சி மேடையில் மாவட்ட ஆட்சியர் சாந்தா பேசுகையில், "2020- 2021 கல்வியாண்டில் திருவாரூர் மாவட்டத்தில் 91 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் மேல்நிலை முதலாம் ஆண்டு பயிலும் 10,177 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டுவருகிறது" என்றார்.
இதையும் படிங்க: 695 மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டியை வழங்கிய அமைச்சர்!