ETV Bharat / state

மன்னார்குடி அருகே டெங்கு காய்ச்சலுக்கு மூன்று வயது சிறுவன் உயிரிழப்பு..! - தஞ்சாவூர் அரசு மருத்துவமனை

திருவாரூர்: மன்னார்குடி அருகே டெங்கு காய்ச்சலுக்கு மூன்று வயது சிறுவன் பலியான சம்பவம் உறவினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

3 year old boy dies of dengue fever
author img

By

Published : Nov 15, 2019, 5:05 AM IST

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே மேலபூவனூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் மகேந்திரன் - லதா தம்பதி. விவசாய கூலியான இவர்களுக்கு இரண்டு மகன்கள், இரண்டு மகள்கள் உள்ளனர்.

இந்நிலையில் இளைய மகனான வசந்தகுமாருக்கு (3) கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதைதொடர்ந்து சிறுவனின் பெற்றோர்கள் சிகிச்சைக்காக நீடாமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி அளித்த பின்னர் மேல்சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு சிறுவனின் உடலை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் வசந்தகுமாருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பதைக் கண்டுபிடித்தனர். அதனைத் தொடர்ந்து சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

டெங்கு காய்ச்சலுக்கு 3 வயது சிறுவன் பலி

குழந்தைகள் தினத்தன்று டெங்கு காய்ச்சலால் சிறுவன் உயிரிழந்துள்ள சம்பவம் மேலபூவனூர் கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Intro:Body:மன்னார்குடி அருகே டெங்கு காய்ச்சலுக்கு 3 வயது சிறுவன் பலி.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே மேல பூவனூர் கிராமத்தை சேர்ந்தவர் மகேந்திரன் - லதா. இவர்கள் விவசாய கூலி வேலை செய்து வருகிறார்கள். இவர்களுக்கு இரண்டு மகன்கள், இரண்டு மகள்கள் உள்ளனர். இளைய மகன் வசந்தகுமார் (3) கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு காய்ச்சல், சளி , இருமல் என கூறி நீடாமங்கலம் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு இவரின் உடலை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் வசந்தகுமார்க்கு டெங்கு காய்ச்சல் இருப்பதாக கூறி தொடர்ந்து மருத்துவம் பார்த்து வந்த நிலையில் இன்று சிறுவன் வசந்தகுமார் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து இதுவரையிலும் சுகாதார துறை சார்பில் அதிகாரிகள் யாரும் வந்து பார்க்கவில்லை. முன்னெச்சொிக்கை நடவடிக்கை இதுவரை எடுக்கவில்லை. மகேந்திரன் குடும்பத்தில் அனைவரும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் .

நவம்பர் 14 குழந்தைகள் தினத்தன்று டெங்கு காய்ச்சலால் சிறுவன் உயிரிழந்துள்ள சம்பவம் மேலப்பூவனூர் கிராம மக்களிடையே பெரும் சோகத்தை எற்ப்படுத்தியுள்ளது.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.