ETV Bharat / state

பச்சிளம் குழந்தையை கைட்டைப்பையில் எடுத்து வந்த பெண்.. திருவண்ணாமலை பகீர் சம்பவம்!

author img

By

Published : Dec 31, 2022, 10:34 PM IST

பிறந்து 7 நாட்களான ஆன பச்சிளம் குழந்தையை பெண் ஒருவர் கட்டைப்பையில் தூக்கிக் சென்ற சம்பவம் திருவண்ணாமலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிறந்து 7 நாட்களான பச்சிளம் குழந்தை, கட்டைப்பையில் தூக்கி சென்ற பெண்- நடந்தது என்ன?

திருவண்ணாமலை: செங்கம் அடுத்த கர்ணலாபாடி கிராமத்தைச் சார்ந்த மதியழகன் மனைவி விஜயா வயது (48) இவர்கள் சென்னை செம்மஞ்சேரி பகுதியில் மளிகைக் கடை நடத்தி வருகிறார். மதியழகனுக்கும் விஜயாவிற்கும் திருமணம் நடந்து 20 ஆண்டுகளுக்கு மேலாகியும் இதுவரை குழந்தை பாக்கியம் இல்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் துரைப்பாக்கம் பகுதிக்கு உட்பட்ட ஆல்பர்ட் என்பவருடைய மனைவி நீர்த்தி இவர்களுக்கு ஏற்கனவே ஒரு குழந்தை உள்ளது. இந்நிலையில் நீர்த்தி சமீபத்தில் கர்ப்பமாகி அவருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது.

அதனைத்தொடர்ந்து ஆல்பர்ட் குடி போதைக்கு அடிமையானவர், இவர் தினந்தோறும் குடிபோதையில் அவருடைய மனைவி நீர்த்தியிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். மீண்டும் குழந்தை பிறந்த பிறகும் ஆல்பர்ட் மனைவியிடம் குடிபோதையில் சண்டையிட்டுள்ளார். இதனால் மனம் உடைந்து போன நீர்த்தி தற்கொலைக்கு முயன்றதாகக் கூறப்படுகிறது.

தகவல் அறிந்த விஜயா, நேரடியாகச் சென்னை சென்று குழந்தையின் தாய் நீர்த்தியிடம் குழந்தையைத் தத்தெடுத்துக்கொள்வதாகக் கேட்டுள்ளார். அதன் பிறகு விஜயாவின் குழந்தை பிறந்து ஏழு நாள் ஆன பெண் குழந்தையை சட்டப்படி தத்தெடுக்க முயற்சி செய்தார்.

ஆனால் குழந்தை தத்தெடுப்பதற்கான சட்டத்துறைகளை அறிந்து கொண்ட விஜயா தனக்கு சட்டப்படி சென்றால் குழந்தை உடனடியாக தத்தெடுக்க முடியாது என்று குழந்தையின் தாய் நீர்த்தியிடம் மனப்பூர்வமாக குழந்தையை விஜயாவிடம் ஒப்படைப்பதாக எழுதிய கடிதத்தை நீர்த்தி எழுதி கொடுத்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து விஜயா அந்தக் குழந்தையை ஒரு கட்ட பையில் வைத்துக்கொண்டு சென்னையிலிருந்து பேருந்தில் திருவண்ணாமலை பேருந்து நிலையத்திற்கு வந்து இறங்கியுள்ளார். பின்னர் பேருந்து நிலையத்திலிருந்து தனது சொந்த ஊருக்குச் செல்ல வேறொரு பேருந்து நிலையத்திற்குச் சென்று கொண்டு இருந்தார். அப்போது கட்டப்பையிலிருந்த குழந்தை அழுத்துள்ளது.

அங்கு கட்டைவைத்து வியாபாரம் செய்யும் நபர்கள் சந்தேகம் அடைந்து விஜயாவை நிறுத்தி கட்டைப்பையை பார்த்துள்ளனர். அப்போது குழந்தை இருந்ததை கண்ட அவர்கள் உடனடியாக அங்கு இருந்த கடைக்காரர்கள் ஆட்டோவில் ஏற்றி அவரை உடனடியாக அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று காவலரிடம் புகார் அளித்துள்ளார். விஜயாவிடம் கட்டைப்பையிலிருந்த ஏழு நாட்கள் ஆன பெண் குழந்தையை மீட்டனர்.

பின்னர் மகளிர் காவல் துறையினர் விஜயாவிடம் நடத்திய விசாரணையில் சென்னை துரைப்பாக்கத்தைச் சார்ந்த நீர்த்தியிடம் மனப்பூர்வமாக எனக்கு குழந்தை அளிப்பதாகக் கடிதம் எழுதிக் கொடுத்த பின்னர் தான் குழந்தையை நான் பெற்றுச் செல்வதாகக் கூறினார். உடனடியாக காவல்துறையினர் குழந்தையின் தாய் நீர்த்தியை விசாரணைக்காகத் திருவண்ணாமலை வரச்சொல்லி தகவல் கொடுத்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து விஜயாவிடம் மீட்கப்பட்ட ஏழு நாள் ஆன பெண் குழந்தையைக் குழந்தை பாதுகாப்பு அலுவரிடம் ஒப்படைக்கப்பட்டு காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. பிறந்து 7 நாட்களை ஆன குழந்தையைக் கட்டைப் பையில் கொண்டு சென்ற சம்பவம் திருவண்ணாமலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க:புத்த மதத்தை அழிக்க சீனா முயற்சி: தலாய்லாமா பகீர் குற்றச்சாட்டு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.