திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபிசக்ரவர்த்தியின் உத்தரவுப்படி, தானிப்பாடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இளையாங்கண்ணி கிராமத்தில் தானிப்பாடி உதவி ஆய்வாளர்கள் காவலர்களுடன் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அப்பகுதியை சேர்ந்த தங்கராஜ் (35), அந்தோனிசாமி (24) ஆகிய இருவர் சட்டவிரோதமாக நாட்டு துப்பாக்கிகளைப் பயன்படுத்தி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து அவர்கள் இருவரையும் கைது செய்த காவல்துறையினர், அவர்களிடமிருந்து இரண்டு நாட்டு துப்பாக்கிகள், இரு சக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
இதையும் படிங்க:மேட்டூர் அணைப் பகுதியில் ஆண் சடலம் மீட்பு; போலீஸ் தீவிர விசாரணை