ETV Bharat / state

உரிமை வேட்டைக்கு தயாராகும் வேட்டைக்கார இன மக்கள்! - Thiruvannamalai

திருவண்ணாமலை: வேட்டைக்காரன் இனத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கவில்லை என்றால், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோம் என்று தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாநில தலைவர் பி. டில்லிபாபு தெரிவித்துள்ளார்.

பி.டில்லிபாபு
author img

By

Published : Jun 3, 2019, 8:30 AM IST

திருவண்ணாமலையில் தமிழ்நாடு வேட்டைக்காரன் பழங்குடியின மக்கள் முன்னேற்றச் சங்கம் சார்பில் முதல் மாவட்ட மாநாடு பண்ட ரெட்டியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இம்மாநாட்டில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாநில தலைவரும் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான பி. டில்லிபாபு கலந்துகொண்டு மாநாட்டு நிறைவு உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், "வேட்டைக்காரன் இன மக்களை பழங்குடி பட்டியலில் சேர்த்திட தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து மனு அளித்தோம். இதனையடுத்து தமிழ்நாடு முதலமைச்சர் வேட்டைக்காரன் இன மக்களிடையே கள ஆய்வு நடத்தி அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஊட்டியில் உள்ள பழங்குடியினர் ஆராய்ச்சி மைய இயக்குநருக்கு உத்தரவிட்டார். ஆனால் பழங்குடியினர் ஆராய்ச்சி மையம் இதுவரை அந்த ஆய்வினை நடத்த முன்வரவில்லை.

பழங்குடியின மக்கள் முன்னேற்ற சங்கம் மாநாடு

வேட்டைக்காரன் இனத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கவில்லை எனில் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த வேட்டைக்காரன் இன மக்கள் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோம்" என தெரிவித்தார்.

Intro:திருவண்ணாமலையில் தமிழ்நாடு வேட்டைக்காரன் பழங்குடியின மக்களின் முன்னேற்ற சங்கம் சார்பில் முதல் மாவட்ட மாநாடு பண்ட ரெட்டியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

Body:திருவண்ணாமலையில் தமிழ்நாடு வேட்டைக்காரன் பழங்குடியின மக்களின் முன்னேற்ற சங்கம் சார்பில் முதல் மாவட்ட மாநாடு பண்ட ரெட்டியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இம் மாநாட்டில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாநில தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான பி.டில்லிபாபு கலந்து கொண்டு மாநாட்டு நிறைவு உரையாற்றினார். அப்போது பேசிய அவர் கூறியதாவது, ஆதி பழங்குடி இனமான வேட்டைக்காரன் இனம் 1956 இல் இந்திய குடியரசுத் தலைவரால் பழங்குடி என அறிவிக்கப்பட்டது. ஆனால் தமிழக அரசு இதுநாள் வரை எங்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் வைத்துள்ளது. இதனால் எங்களுடைய வேலைவாய்ப்பு உயர்கல்வி மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் மறுக்கப்பட்டு வருகின்றன. நம் அண்டை மாநிலமான பாண்டிச்சேரி அரசு அங்கு வாழும் வேட்டைக்காரன் இன மக்களை பழங்குடியினர் பட்டியலில் கடந்த டிசம்பர் 2014 ஆம் ஆண்டு சேர்த்துள்ளனர். வேட்டைக்காரன் இன மக்களை பழங்குடி பட்டியலில் சேர்த்திட சங்கத்தின் சார்பில் தொடர்ச்சியாக பல்வேறு இயக்கங்கள் மூலம் அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம். தமிழக முதல்வர் அவர்களை நேரில் சந்தித்து மனு கொடுத்தோம். அதன் விளைவாக தமிழக முதல்வர் அவர்களும் வேட்டைக்காரன் இன மக்களிடையே கள ஆய்வு நடத்தி அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஊட்டியில் உள்ள பழங்குடியினர் ஆராய்ச்சி மைய இயக்குனர் அவர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். ஆனால் பழங்குடியினர் ஆராய்ச்சி மையம் இதுவரை தனது ஆய்வினை மக்களிடையே நடத்த முன்வரவில்லை. ஆகவே தமிழக அரசு வேட்டைக்காரன் இனத்தை பழங்குடியினர் ஆராய்ச்சி மையத்தின் மூலம் ஆய்வு செய்து மத்திய அரசுக்கு பரிந்துரை செய்து உறுதியான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நடைபெறும் மாவட்ட முதல் மாநாட்டில் திருவண்ணாமலை மாவட்டத்தில் வசிக்கும் வேட்டைக்காரன் இன மக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டுள்ளனர். வேட்டைக்காரன் இனத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வில்லை எனில் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த வேட்டைக்காரன் இன மக்கள் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை திரட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என கூறினார்.

Conclusion:திருவண்ணாமலையில் தமிழ்நாடு வேட்டைக்காரன் பழங்குடியின மக்களின் முன்னேற்ற சங்கம் சார்பில் முதல் மாவட்ட மாநாடு பண்ட ரெட்டியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.