ETV Bharat / state

இரவு, பகல் பாராமல் உழைப்பவர்கள் காவலர்கள் - ஆட்சியர் புகழாரம்! - மாவட்ட ஆட்சித் தலைவர்

திருவண்ணாமலை: இரவு, பகல் பாராமல் உழைப்பவர்கள் காவல்துறையினர் என, மாணவர் காவல் படையினருக்கான இரண்டு நாள் பயிற்சி முகாமை தொடக்கி வைத்த ஆட்சியர் கூறினார்.

training-camp-for-student-police-collector-participation

author img

By

Published : Feb 18, 2020, 12:19 PM IST

திருவண்ணாமலை மாவட்டத்தில் நகர காவல் துறையின் சார்பாக மாணவர் காவல் படையினருக்கான இரண்டு நாள் பயிற்சி முகாம் தென்மாத்தூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கந்தசாமி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்தி ஆகியோர் கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி தொடக்கிவைத்தனர்.

பின்னர் மாணவர் காவல் படையைச் சேர்ந்த மாணவர்களிடையே பேசிய மாவட்ட ஆட்சியர் கந்தசாமி, இரவு, பகல் பாராமல் உழைப்பவர்கள் காவல்துறையினர். அவர்களுடைய வீடுகளுக்குச் சென்று விசாரித்தால், எங்கள் அப்பா எப்போது செல்வார், எப்போது வருவார் என்பது எங்களுக்கு தெரியாது என்று காவல்துறையினரின் குழந்தைகள் கூறுவார்கள். காவலர்களின் மனைவிகள் கூறக் கேட்டிருக்கிறோம், பணத்தைத் தவிர வேறு உதவி எதுவும் என்னுடைய கணவரிடமிருந்து கிடைப்பதில்லை. எல்லா வேலைகளையும் நாங்களே செய்து கொள்கிறோம். இவ்வாறு அனைத்தையும் தியாகம் செய்துதான் காவல்துறையினர் பொதுமக்களுக்கு சேவை புரிகின்றனர் என்றார்.

மாணவர் காவல் படையினருக்கான பயிற்சி முகாம்

தொடர்ந்து பேசிய அவர், இக்காலகட்டத்தில் குற்றங்கள், தவறுகள் அதிகமாக நடைபெறுகின்றன. சுய கட்டுப்பாடு என்பது இந்த சமுதாயத்தில் குறைவாக உள்ளது. இன்று 198 பள்ளிகளில் 8 ஆயிரத்து 714 மாணவ, மாணவிகள் இதுபோன்ற நிகழ்ச்சிகளில் பங்கு பெறுகின்றனர். இப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் மாணவர்கள் காவல் நிலையம், காவல் நிலையத்தில் என்ன நடக்கிறது, காவல்நிலையத்தில் எவ்வாறு புகார் அளிக்க வேண்டும், காவல் நிலையம் குறித்த மாணவர்களிடையே உள்ள அச்சங்கள் அனைத்தும் விலகுவதற்கு இது ஒரு வாய்ப்பாக அமையும் என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஓய்வுபெற்ற காவல் ஆய்வாளரை இயற்கை விவசாயியாக மாற்றிய நம்மாழ்வார்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.