திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு, அயோத்திநகரம் பகுதிகளைச் சேர்ந்த 22 வயது பெண் ஒருவருக்கும், 34 வயதான ஆண் ஒருவருக்கும் கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மலையனூர் பகுதியைச் சேர்ந்த 30 வயது பெண் ஒருவருக்கு கரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 165 இல் இருந்து 168 ஆக உயர்ந்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்திற்கு ஏப்ரல் 30ஆம் தேதியிலிருந்து மே 20ஆம் தேதி வரை பிற மாநில, மாவட்டங்களிலிருந்து வந்தவர்களின் எண்ணிக்கை மொத்தம் 8,101. அதில் சென்னையிலிருந்து வந்தவர்கள் 3,298 பேர். அதனால் அவர்கள் அனைவரின் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன. அதில் கரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். பாதிக்கப்படாதவர்கள் வீடுகளுக்கு அனுப்பப்பட்டு 14 நாள்கள் தனிமைப்படுத்தப்படுகின்றனர்.
இதையும் படிங்க: மகாராஷ்டிராவில் 40 ஆயிரத்தை நெருங்கும் கரோனா பாதிப்பு!