ETV Bharat / entertainment

டெல்லி கணேஷ் முதல் டேனியல் பாலாஜி வரை; இந்திய சினிமாத்துறை 2024இல் இழந்த பிரபலங்கள்! - CINEMA CELEBRITIES DEATH 2024

cinema celebrities death 2024: இந்திய சினிமாத்துறையில் பல்வேறு பிரிவுகளில் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றிய கலைஞர்கள் டெல்லி கணேஷ், ஜாகிர் உசேன் உள்ளிட்டோர் இந்த வருடம் உயிரிழந்துள்ளனர்.

2024இல் உயிரிழந்த பிரபலங்கள்
2024இல் உயிரிழந்த பிரபலங்கள் (Credits - ETV Bharat Tamil Nadu, ANI)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Dec 28, 2024, 1:22 PM IST

ஹைதராபாத்: இந்த 2024ஆம் ஆண்டு இந்திய சினிமாத்துறை பல்வேறு திரைப் பிரபலங்களை இழந்துள்ளது. மறைந்த நடிகர்கள், இசையமைப்பாளர், எழுத்தாளர்கள் ஆகியோர் இந்திய சினிமாத்துறையின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றி உள்ளனர். இந்த ஆண்டு இந்திய சினிமாத்துறையில் மறைந்த பிரபலங்கள் குறித்து இந்ஹ செய்தியில் காணலாம்.

டெல்லி கணேஷ்: இந்திய விமானப் படையில் பணிபுரிந்து, பின்னர் 1976இல் ’பட்டிணப் பிரவேசம்’ திரைப்படம் மூலம் நடிகராக அறிமுகமானவர் டெல்லி கணேஷ். டெல்லி கணேஷ் நடித்த ’அபூர்வ சகோதரர்கள்’, ’அவ்வை சண்முகி’, ’நாயகன்’, ’மைக்கேல் மதன காம ராஜன்’, ’தெனாலி’ உள்ளிட்ட படங்களில் தனது குணச்சித்திர கதாபாத்திரங்களுக்காக வரவேற்பை பெற்றார்.

நடிகர் டெல்லி கணேஷ்
நடிகர் டெல்லி கணேஷ் (Credits - ETV Bharat Tamil Nadu)

நடிகர் டெல்லி கணேஷ் தமிழ்நாடு மாநில அரசின் சிறந்த நடிகருக்கான விருது, கலைமாமணி விருது, தமிழ் நடிகர் சங்கத்தின் 68வது பொதுக்குழு கூட்டத்தில் வாழ்நாள் சாதனையாளர் விருது ஆகிய விருதுகளை பெற்றுள்ளார். நடிகர் டெல்லி கணேஷ் 80 வயதை பூர்த்தி செய்த நிலையில், கடந்த நவம்பர் 10ஆம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார்.

ஜாகிர் உசேன்: இந்திய இசைத்துறையில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார் தபேலா இசைக்கலைஞர் ஜாகிர் உசேன். பிரபல தபேலா இசைக் கலைஞரான ஜாகிர் உசேன் பல்வேறு மொழி திரைப்படங்கள், விளம்பரங்கள் ஆகியவற்றில் பணியாற்றியுள்ளார். இவர் இசையமைத்த தேநீர் விளம்பரம் wah taj மிகவும் பிரபலமடைந்தது.

ஜாகிர் உசேன்
ஜாகிர் உசேன் (Credits - ANI)

தபேலா இசைக் கலைஞராக மட்டுமில்லாமல் இசையமைப்பாளராகவும், நடிகராகவும் பணியாற்றியுள்ளார். இந்நிலையில் ஜாகிர் உசேன் கடந்த டிசம்பர் 15ஆம் தேதி அமெரிக்காவில் உள்ள சான் ஃபிரான்சிஸ்கோ மாகாணத்தில் உள்ள மருத்துவமனையில் உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 73.

ஷ்யாம் பெனகல்: இந்திய சினிமாவில் சுயாதீன சினிமாவை உருவாக்கியதில் முக்கிய இயக்குநராக பார்க்கப்படுபவர் ஷ்யாம் பெனகல் (90). ஷ்யாம் பெனகல் படங்கள் பல்வேறு ஜானர்களில் சமூக கருத்துக்களை வலுவாக எடுத்துரைத்தது. தனது திரை வாழ்வில் திரைப்படங்கள் மட்டுமின்றி தொலைக்காட்சி துறையிலும் முத்திரை பதித்துள்ளார்.

இயக்குநர் ஷ்யாம் பெனகல்
இயக்குநர் ஷ்யாம் பெனகல் (Credits - ANI)

இயக்குநர் ஷ்யாம் பெனகல் சிறந்த இயக்குநருக்கான தேசிய விருதை 5 முறை வென்றுள்ளார். அதேபோல் அவரது திரைப்படங்கள் 8 முறை தேசிய விருதுகள் வென்றுள்ளது. இவர் கடந்த டிசம்பர் 23ஆம் தேதி கல்லீரல் தொடர்பான நோய் காரணமாக உயிரிழந்தார்.

எம்.டி.வாசுதேவன் நாயர்: கேரளாவின் பழம்பெரும் எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் நாயர், சிறு கதைகள், நாவல்கள், திரைக்கதை, இலக்கியம், பத்திரிகைத்துறை என மலையாள கலையுலகின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றியவர் எம்.டி.வாசுதேவன். 91 வயதான இவர் கோழிக்கோடு மருத்துவமனையில் மூச்சுத்திணறல் காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி கடந்த டிசம்பர் 25ஆம் தேதி உயிரிழந்தார்.

எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் நாயர்
எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் நாயர் (Credits - PTI)

இதையும் படிங்க: ’ஐயையோ’ ஆல்பம் பாடல் மூலம் இசையமைப்பாளரான ஹாரிஸ் ஜெயராஜ் மகன்! - HARRIS JAYARAJ SON SAMUEL NICHOLAS

டேனியல் பாலாஜி: மறைந்த நடிகர் முரளியின் சகோதரரும், நடிகருமான டேனியல் பாலாஜி காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, பொல்லாதவன், பைரவா, வட சென்னை, பிகில் உள்ளிட்ட பல தமிழ் திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். பல படங்களில் வில்லன் வேடங்களில் நடித்து பிரபலமானவர், டேனியல் பாலாஜி. 48 வயதான இவர் மாரடைப்பு காரணமாக கடந்த மார்ச் 29ஆம் தேதி உயிரிழந்தார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.