திருவண்ணாமலை மாவட்டத்தில் மிகவும் பிரசித்திப்பெற்ற அண்ணாமலை கோயிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு ஒன்பதாம் நாளில் மகிஷாசுரமர்த்தினி அலங்காரம் செய்யப்பட்டது. ஆண்டுக்கு இரண்டு முறை மட்டுமே கருவறையிலுள்ள உண்ணாமுலை அம்மனுக்கு நடைபெறும் சந்தனக்காப்பு அலங்கார நிகழ்வு கோலாகலமாக நடைபெற்றது.

சரஸ்வதி பூஜையை முன்னிட்டு சந்தனக்காப்பு அலங்காரத்தில் உண்ணாமலை அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதனைத்தொடர்ந்து அம்மனுக்கு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டது. அப்போது திரளான பக்தர்கள் அம்மனை தரிசித்தனர்.

மேலும், உண்ணாமுலை அம்மனுக்கு வரலட்சுமி விரத தினத்தன்று சரஸ்வதி பூஜை நாளன்றும் சந்தனக்காப்பு நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.