ETV Bharat / state

தீயாய் பரவிய வதந்தி: ஆண்களுக்காக விளக்கேற்றிய பெண்கள் - கிரிவல தடையால் ஆண்களுக்கு தோஷம்

திருவண்ணாமலை: கிரிவல தடையால் ஆண்களுக்கு தோஷம் ஏற்பட்டுள்ளதாக பரவிய வதந்தியால் வீதிகளில் விளக்கேற்றி பெண்கள் வழிபட்டனர்.

thiruvannamalai district women lighting the lamp in fornt of their house for  Rumors

author img

By

Published : Apr 8, 2020, 11:32 AM IST

கரோனா வைரஸ் எதிரொலியால் திருவண்ணாமலையில் நூற்றாண்டு கால வரலாற்றில் முதன் முறையாக, உலகப் பிரசித்திபெற்ற கிரிவலத்திற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் முதன்முறையாக இதுபோன்று தடை விதிக்கப்பட்டுள்ளதால் வீட்டில் உள்ள ஆண்களுக்கு தோஷம் என வதந்தி பரவியதையடுத்து, திருவண்ணாமலை மாவட்டம் புது வாணியங்குள தெருவில் உள்ள பொதுமக்கள் தங்கள் வீடுகளை கழுவி, வாசலில் கோலமிட்டு, வீட்டில் உள்ள ஆண்களின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு வீதிகளில் கோலத்தின் மீது விளக்கேற்றி வழிபட்டனர்.

thiruvannamalai district women lighting the lamp in fornt of their house for  Rumors
ஆண்களுக்காக விளக்கேற்றிய பெண்கள்

இந்தச் சம்பவம் காட்டுத் தீப்போல் நகர் முழுவதும் பரவியதையடுத்து, நகரின் பல இடங்களிலும் பெண்கள் இதேபோன்று வழிபாடு மேற்கொண்டனர்.

இதையும் படிங்க: திருவண்ணாமலை கார்த்திகை மாத பௌர்ணமி கிரிவலம்: 10 லட்சம் பக்தர்கள் பங்கேற்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.