திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த பரமனந்தல் பகுதியைச் சேர்ந்தவர் சிவராசு, இவரது மனைவி காமாட்சி ஆவார். இருவருக்கும் சொந்தமான மூன்று சென்ட் நிலத்தை தனது அக்கா, தங்கை ஆகியோர் பெயரில் எழுதிக் கொடுப்பதற்கு சிவராசு திட்டமிட்டுள்ளார்.
இதனை முன்னதாகவே தெரிந்துகொண்ட காமாட்சி தனது மகள் பெயரில் அந்த மூன்று சென்ட் இடத்தை பத்திரப்பதிவு செய்ய செங்கம் சார்பதிவாளர் அலுவலகத்திற்குச் சென்றுள்ளார்.
அப்போது அங்கு வந்த சிவராசு மற்றும் அவரது அக்கா, தங்கை ஆகிய மூவரும் ஒன்றினைந்து காமாட்சியை தாக்க முயன்றுள்ளனர். அப்போது தன்னை அடிக்க முற்பட்டால் தனது கழுத்தை அறுத்துக் கொள்வதாக அவர் மிரட்டியுள்ளார்.
அதை கொஞ்சம் கூட பொருட்படுத்தாமல் காமாட்சியை கழுத்தை அறுத்துக் கொண்டு சாகும்படி சிவராசு கோபத்தில் கூறியதால் மனமுடைந்த அவர் தனது கழுத்தை அறுத்துக்கொண்டார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.
ரத்த வெள்ளத்தில் மயங்கி கீழே விழுந்த அவரை அருகில் இருந்தவர்கள் ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு செங்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் காமாட்சி அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை மருத்துவமனைக்கு வைக்கப்பட்டார்.
இதையும் படியுங்க: குடும்பத் தகராறில் மகன் தற்கொலை: இறப்பில் சந்தேகம் இருப்பதாக தந்தை புகார்