திருவண்ணாமலை கோபால பிள்ளையார் கோவில் தெருவில், இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கிவரும் திருக்கோயில் ஸ்ரீ கோபால விநாயகர் ஆலயம். இந்த ஆலயத்தில் அதிகாலை நடை திறக்கப்பட்டு கோபால விநாயகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
![ஸ்ரீ கோபால விநாயகர் திருக்கோயில்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-tvm-05-special-yaagam-vis-7203277_08042020174604_0804f_1586348164_587.png)
அதனைத்தொடர்ந்து, தற்பொழுது உலகம் முழுவதும் பரவிவரும் கரோனா வைரஸிலிருந்து பொது மக்களை காக்க சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இந்த அபிஷேகத்தில் பஞ்சகவ்ய அபிஷேகம், பஞ்சாமிர்த அபிஷேகம், பாலபிஷேகம், ஸ்நபன அபிஷேகம் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் நடைபெற்றன.
![மக்களைக் காக்க சிறப்பு யாகம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-tvm-05-special-yaagam-vis-7203277_08042020174604_0804f_1586348164_996.png)
முன்னதாக இக்கோயில் வளாகத்தில் யாக குண்டம் அமைத்து பல்வேறு மூலிகைப் பொருள்களைக் கொண்டு உலக நன்மைக்காகவும், கொடிய நோயான கரோனா வைரஸிலிருந்து பொது மக்களை பாதுகாக்கவும் சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க சிறப்பு யாகம் நடத்தினர்.
இதையும் படிங்க: வெள்ளிக்கிழமை முதல் ரேபிட் டெஸ்ட் கிட் சோதனை - மாவட்ட ஆட்சியர்