ETV Bharat / state

காய்கறி வாகனத்தில் கடத்திவரப்பட்ட ரூ. 67 ஆயிரம் மதிப்பிலான மதுபானம் பறிமுதல்! - காவல் துறையினர்

திருவண்ணாமலை: வெளிமாநிலத்தில் இருந்து காய்கறி வாகனத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.67 ஆயிரம் மதிப்புள்ள மதுபானங்கள் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டன.

Seizure of 67,000 worth of foreign liquor in Thiruvannamalai  thiruvannamalai news  thiruvannamalai latest news  foreign liquor  திருவண்ணாமலையில் 67 ஆயிரம் மதிப்பிலான வெளிமாநில மதுபானம் பறிமுதல்  crime news  திருவண்ணாமலை செய்திகள்  காவல் துறையினர்  குற்றச் செய்திகள்
67 ஆயிரம் மதிப்பிலான வெளிமாநில மதுபானம் பறிமுதல்
author img

By

Published : May 31, 2021, 6:24 AM IST

கரோனா தொற்றுப் பரவலை கட்டுப்படுத்துவதற்காக தமிழ்நாடு அரசு முழு ஊரடங்கு அமல்படுத்தியது. இதனால் அத்தியாவசிய தேவைகள் இன்றி வெளியே சுற்றுபவர்களை காவல் துறையினர் கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன்படி திருவண்ணாமலை மாவட்டத்தில் காவல்துறையினர் சுழற்சி முறையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், திருவண்ணாமலை அருகே உள்ள அத்தியந்தல் பேருந்து நிறுத்தம் பகுதியில் திருவண்ணாமலை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் காவல்துறையினர் இன்று (மே.30) காலை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக காய்கறிகள் ஏற்றி வந்த மினி வேனை நிறுத்தி சோதனையிட்டனர்.

Seizure of 67,000 worth of foreign liquor in Thiruvannamalai  thiruvannamalai news  thiruvannamalai latest news  foreign liquor  திருவண்ணாமலையில் 67 ஆயிரம் மதிப்பிலான வெளிமாநில மதுபானம் பறிமுதல்  crime news  திருவண்ணாமலை செய்திகள்  காவல் துறையினர்  குற்றச் செய்திகள்
திருவண்ணாமலையில் 67 ஆயிரம் மதிப்பிலான வெளிமாநில மதுபானம் பறிமுதல்!

அதில், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து முட்டைக்கோஸ் ஏற்றி வந்த வாகனத்தில், வெளிமாநில மதுபானம் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து காவல்துறையினர் வாகன உரிமையாளரும் ஓட்டுநருமான, பெங்களூருவைச் சேர்ந்த பிரகாஷ் (29), பெங்களூரு லால்பகதூர் கேஸ் கார்டன் பகுதியைச் சேர்ந்த அரவிந்த்(24) ஆகிய இருவரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து சுமார் ரூ.67 ஆயிரம் மதிப்புள்ள வெளிமாநில மதுபானத்தையும், காய்கறி வாகனத்தையும் பறிமுதல் செய்துள்ளனர். தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: பிஎஸ்பிபி பள்ளி பாலியல் வழக்கு: கராத்தே மாஸ்டரை தூக்கிய போலீஸ்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.