திருவண்ணாமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரண்டு மணி நேரமாக இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது.
கனமழையால் தெருக்களிலும், கால்வாய்களிலும் வெள்ள நீா் பெருக்கெடுத்து ஓடியது.
மேலும் வீடுகளில் தண்ணீா் புகுந்ததால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர். நகராட்சி நிார்வாகம் வெள்ள நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: சேலத்தில் விடிய விடிய மழை! மழைநீரில் சிக்கி தவிக்கும் வீடுகள்!