ETV Bharat / state

ஆரணியில் மூதாட்டி கொலை - நகை கொள்ளை

திருவண்ணாமலை: ஆரணி அருகே தனியாக வசித்துவந்த ஓய்வுபெற்ற ஆசிரியையான மூதாட்டியை கொடூரமான முறையில் கொலைசெய்து நகை, பணத்தை அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.

ஆரணி
author img

By

Published : Nov 8, 2019, 12:19 PM IST

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த முனிவாந்தாங்கல் கிராமத்தில் வசிக்கும் ஓய்வுபெற்ற அரசுப் பள்ளி ஆசிரியை லூர்துமேரி (69). இவர் திருமணம் செய்துகொள்ளாமல் வீட்டில் தனியாக வசித்துவந்தார். அவருடன் உடன்பிறந்தவர்கள் எட்டு பேர் உள்ளனர். உறவினர்கள் வெளிநாட்டிலும் வெளிமாநிலத்திலும் வசித்துவருவதால் லூர்துமேரி மட்டும் வீட்டில் தனியாக இருந்துவந்தார்.

இதனை நோட்டமிட்ட அடையாளம் தெரியாத நபர்கள் நேற்று நள்ளிரவு வீட்டினுள் புகுந்து நகை, பணத்தை கொள்ளையடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு அவரை கொடூரமான முறையில் கொலை செய்தனர். அதனைத் தொடர்ந்து லூர்துமேரி உறவினர் டான்போஸ்கோ என்பவர் வீட்டின் கதவை திறந்து பார்த்தபோது அவர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து திருவண்ணாமலை மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அசோக்குமார் தலைமையில் காவல் துறையினர் குவிக்கபட்டு விசாரணை மேற்கொண்டனர். மேலும், மோப்பநாய் வரவழைக்கப்பட்டும் தேடுதல் நடைபெற்றது.

அதுமட்டுமின்றி, மாவட்ட கைரேகை நிபுணர் காவல் துணை கண்காணிப்பாளர் சுந்தரராஜ் தலைமையில் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து கைரேகை, தடயங்களை சேகரித்தனர். லூர்துமேரியின் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக வேலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

Intro:ஆரணி அருகே தனியாக வசித்து வந்த ஓய்வுபெற்ற ஆசிரியையான மூதாட்டியை கொடூரமான முறையில் கொலை செய்து நகை மற்றும் பணத்திற்காக கொலை நடந்துள்ளதாக போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தகவல்.Body:ஆரணி அருகே தனியாக வசித்து வந்த ஓய்வுபெற்ற ஆசிரியையான மூதாட்டியை கொடூரமான முறையில் கொலை செய்து நகை மற்றும் பணத்திற்காக கொலை நடந்துள்ளதாக போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தகவல்.

மோப்ப நாய் வரவழைக்கபட்டும் கைரேகை நிபுணர்கள் சம்பவஇடத்தில் கைரேகையை சேகரித்தும் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த முனிவாந்தாங்கல் கிராமத்தில் வசிக்கும் ஓய்வுபெற்ற அரசு பள்ளி ஆசிரியை லூர்துமேரி(69) இவர் திருமணம் செய்துகொள்ளாமல் வீட்டில் தனியாக வசித்து வந்தார்.

மேலும் லூர்துமேரியுடன் உடன்பிறந்தவர்கள் எட்டு பேர் உள்ளனர். உறவினர்கள் வெளிநாட்டிலும் வெளிமாநிலத்திலும் வசித்து வருவதால் லூர்துமேரி மட்டும் வீட்டில் தனியாக இருப்பதை தெரிந்துகொண்ட மர்மநபர்கள் நோட்டமிட்டு நேற்று நள்ளிரவில் வீட்டினுள் புகுந்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு ஓய்வுபெற்ற ஆசிரியை லூர்துமேரியை கொடூரமான முறையில் கொலை செய்து உள்ளனர். மற்றும் லூர்துமேரி ஆசையாக வளர்த்த நாயை கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளனர்.

அதனைத்தொடர்ந்து லூர்துமேரி உறவினர் டான்போஸ்கோ என்பவர் வீட்டின் கதவை திறந்து பார்த்தபோது லூர்துமேரி கொடூராமான முறையில் கொலை செய்யபட்டதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

மேலும் திருவண்ணாமலை மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அசோக்குமார் தலைமையில் போலீசார் குவிக்கபட்டு விசாரணையில் மேற்கொண்டனர்.

அதனைத்தொடர்ந்து திருவண்ணாமலையில் இருந்து மோப்பநாய் மியா வரவழைக்கபட்டு மோப்பநாய் வீட்டில் அருகில் உள்ள விவசாய நிலம் மற்றும் சாலைகள் வரையில் சென்று நின்றுவிட்டது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

மேலும் மாவட்ட கைரேகை நிபுணர் டி.எஸ்.பி. சுந்தரராஜ் தலைமையில் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து கைரேகை மற்றும் தடயங்களை சேகரித்தனர்.

லூர்துமேரியின் பிரேதத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக வேலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை நகை மற்றும் பணத்திற்காக கொடூரமான முறையில் கத்தியால் குத்தி கொலை செய்யபட்டதாக போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

Conclusion:ஆரணி அருகே தனியாக வசித்து வந்த ஓய்வுபெற்ற ஆசிரியையான மூதாட்டியை கொடூரமான முறையில் கொலை செய்து நகை மற்றும் பணத்திற்காக கொலை நடந்துள்ளதாக போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தகவல்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.