திருவண்ணாமலை தெற்கு மாவட்டம் காங்கிரஸ் கமிட்டி சார்பாக மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
மாவட்ட தலைவர் செங்கம் குமார் தலைமையில் மாநில காங்கிரஸ் பொதுச் செயலாளரும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான விஜயகுமார் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நகர தலைவர் வெற்றிசெல்வம் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.
விழாவில் மாவட்ட நிர்வாகிகளும், நகர காங்கிரஸ் நிர்வாகிகளும் கலந்து கொண்டு மகாத்மா காந்தி புகழ் ஓங்குக எனக் கூறி புகழஞ்சலி செலுத்தினர்.
இதையும் படிங்க: "திருவண்ணாமலை மாவட்டமா இது?" - நாகநதி ஆற்றில் கரைபுரண்ட வெள்ளம்!