திருவண்ணாமலை: கீழ்பெண்ணாத்தூர் சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான கு.பிச்சாண்டி தனது வாக்கினை திருவண்ணாமலையில் உள்ள சண்முகா தொழிற்சாலை அரசு மேல்நிலைப்பள்ளி வாக்குப்பதிவு மையத்தில் தனது குடும்பத்துடன் வந்து பதிவு செய்தார்.
இதேபோல் திருவண்ணாமலை சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான எ.வ.வேலு, அவரின் சொந்த ஊரான சே.கூடலூர் கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு மையத்தில் அவரது வாக்கினை பதிவு செய்தார்.
இதையும் படிங்க: உழைக்கும் மக்கள் முகத்தில் பொன் சிரிப்பை காண முடிகிறது - வைகோ