திருவண்ணாமலை: திருக்கார்த்திகை தீபத்திருவிழா அண்ணாமலையார் கோயிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து பத்து நாட்கள் காலை மற்றும் இரவு வேலைகளில் பஞ்சமூர்த்திகள் மாட வீதிஉலா நடைபெறும்.
இரண்டாம் நாள் நேற்று (நவ. 28) இரவு உற்சவமான விநாயகர், முருகன், அண்ணாமலையார் உண்ணாமுலையம்மன், பராசக்தி அம்மன் மற்றும் சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்ச மூர்த்திகளுக்கு திருக்கல்யாண மண்டபத்தில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, வண்ண மலர்களால் மாலை சூடப்பட்டு பஞ்சமுக தீபாராதனை நடைபெற்றது.
இதனை தொடர்ந்து பஞ்ச மூர்த்திகள் ஒன்றன்பின் ஒன்றாக கோயில் வளாகத்தை சுற்றி வந்து, ராஜகோபுரம் எதிரே உள்ள 16 கால் மண்டபத்தில் வெள்ளி இந்திர விமானத்தில் எழுந்தருளினர்.
பின்னர் விநாயகர், முருகர், அண்ணாமலையார் உண்ணாமுலையம்மன், பராசக்தி அம்மன் மற்றும் சண்டிகேஸ்வரர் ஆகியோர் ஒன்றன்பின் ஒன்றாக மாட வீதியில் உலா வந்தனர். இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதையும் படிங்க: HOROSCOPE TODAY: நவ.29 இன்றைய ராசிபலன்