திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று(ஜூலை 28) வரை கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 617 ஆக இருந்தது.
இந்நிலையில், இன்று (ஜூலை29) புதிதாக 173 பேருக்கு நோய்த்தொற்று உறுதியானது. இதனால் மாவட்டம் முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 790 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று ( ஜூலை 28) வரை கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 909 ஆகும். இதுவரை சிகிச்சை பலனின்றி 53 பேர் உயிரிழந்துள்ளனர்.
இன்று தொற்று அறியப்பட்டவர்கள், சென்னையிலிருந்து வந்த ஒருவர், ராணிப்பேட்டையில் இருந்து வந்த 2 பேர், நோயாளியுடன் தொடர்பில் இருந்த 55 பேர், இரண்டாம் நிலை நோய்த்தொற்று பெற்ற 26 பேர், புறநோயாளிகள் பிரிவில் இருந்து 67 பேர், முன் களப்பணியாளர்கள் 5 பேர், மற்ற மாவட்டங்களில் இருந்து அனுப்பப்பட்டவர்கள் ஆவார்கள்.
நோய்த்தொற்று பாதிக்கப்பட்டவர்கள் அரசு மருத்துவமனை, மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் உருவாக்கப்பட்டுள்ள கரோனா வார்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.