ETV Bharat / state

கரோனா எதிரொலி: திருவண்ணாமலை கிரிவலம் ரத்து!

திருவண்ணாமலை: அண்ணாமலையார் திருக்கோயிலில் கரோனா வைரஸ் தொற்றைத் தடுக்கும் நோக்கில் ஆனி மாத பவுர்ணமி கிரிவலம் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து,  கிரிவலப்பாதை முழுவதும் பக்தர்களின்றி வெறிச்சோடி காணப்பட்டது.

Corona echo: Thiruvannamalai Girivalam canceled!

author img

By

Published : Jul 5, 2020, 3:16 AM IST

பஞ்சபூதத் தலங்களில் அக்னி தலமாக விளங்கக்கூடியது, திருவண்ணாமலை. இங்குள்ள அண்ணாமலையார் திருக்கோயிலில் பவுர்ணமி கிரிவலம் உலகப்பிரசித்தி பெற்ற விழாவாகும். இவ்விழாவில் உலகம் முழுவதுமிருந்து சுமார் 20 லட்சம் பக்தர்கள் பவுர்ணமி அன்று மட்டும் கிரிவலம் வந்து, அண்ணாமலையாரை தரிசித்துச் செல்வது வழக்கம்.

அதன்படி நேற்று(ஜூலை 4) பிற்பகல் 12.02 மணிக்கு ஆனி மாத பவுர்ணமி தொடங்கி, இன்று(ஜூலை 5) காலை 10.58 மணி வரை, பவுர்ணமி கிரிவலம் வருவதற்கு உகந்த நேரம் ஆகும். ஆனால், தற்போது மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி கரோனா வைரஸ் தொற்றைத் தடுக்கும் விதமாக ஆனி மாத பவுர்ணமி கிரிவலம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.

எனவே, கிரிவலப்பாதை முழுவதும் பக்தர்கள் ஆள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. மேலும் அனைத்து இடங்களிலும் காவல் துறையினர் பலத்த பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு, பக்தர்கள் யாரும் கிரிவலப் பாதை உள்ளே நுழையாதவாறு கண்காணித்து வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.