ETV Bharat / state

சிகிச்சைக்கு வந்த மூதாட்டியை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொள்ள வற்புறுத்தும் அரசு மருத்துவர் - வைரலாகும் ஆடியோ! - today latest news

Government doctor negotiating audio: கை உடைந்த மூதாட்டி ஒருவர், வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகச் சென்றபோது, எலும்பு முறிவு மருத்துவர் ஒருவர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சிகிச்சை அளிப்பதாகக் கூறிய அரசு மருத்துவரின் ஆடியோ வெளியாகியுள்ளது.

government doctor negotiating audio
அரசு மருத்துவர் நோயாளிகளுக்குத் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சிகிச்சை அளிப்பதாகப் பேரம் பேசிய ஆடியோ வைரல்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 29, 2023, 1:57 PM IST

அரசு மருத்துவர் நோயாளிகளுக்குத் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சிகிச்சை அளிப்பதாகப் பேரம் பேசிய ஆடியோ வைரல்

திருவண்ணாமலை: வந்தவாசி கே.எஸ்.கே நகரைச் சேர்ந்தவர், சபையா பீவி. 70 வயதான இவர், வீட்டில் நடந்து சென்றபோது கீழே விழுந்து கை உடைந்த காரணத்தால், சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். அங்கு மருத்துவப் பதிவு செய்து உள்ளே சென்று மருத்துவரை அணுகியபோது, அருண் மகேஷ் என்ற எலும்பு முறிவு மருத்துவர் பணியில் இல்லை என கூறப்படுகிறது.

இந்த நிலையில், அரசு மருத்துவமனையில் பணிபுரிந்த மற்றொரு மருத்துவர் எலும்பு முறிவு மருத்துவரின் செல்போன் நம்பரைக் கொடுத்துப் பேசச் சொல்லி இருக்கிறார். அப்போது கை உடைந்த மூதாட்டி சபையாவின் உறவினரான அக்பர் என்பவர், வந்தவாசி அரசு மருத்துவமனையில் பணிபுரியும் எலும்பு முறிவு மருத்துவரான அருண் மகேஷிடம் செல்போனில் பேசியுள்ளார்.

அப்போது மூதாட்டியின் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது, இதற்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும், இதற்கு 35 ஆயிரம் ரூபாய் செலவாகும் என்று தொலைபேசியில் தெரிவித்துள்ளார், அருண் மகேஷ். இதனை அடுத்து, ஏழ்மையான குடும்பம் என்பதால் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாமா என்று அக்பர் கேட்டுள்ளார்.

அதற்கு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு நீங்கள் சென்றால், அங்கு நீண்ட நாட்கள் ஆகிவிடும். சீக்கிரம் மருத்துவம் பார்க்க மாட்டார்கள், அதனால் தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாம் என்று வற்புறுத்தி உள்ளார், அருண் மகேஷ்.

மேலும், அறுவை சிகிச்சை செய்வதற்கு 35 ஆயிரம் ரூபாயிலிருந்து 30 ஆயிரம் ரூபாய் மற்றும் 28 ஆயிரம் ரூபாய்க்கு அறுவை சிகிச்சை செய்கிறேன் என்று செல்போனில் எலும்பு முறிவு மருத்துவர் அருண் மகேஷ் பாதிக்கப்பட்டவர்களிடம் அறுவை சிகிச்சைக்குப் பேரம் பேசியதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், பாதிக்கப்பட்ட மூதாட்டியிடம் அறுவை சிகிச்சை செய்வதற்கு அரசு மருத்துவர் பேரம் பேசும் ஆடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதற்கிடையில் பாதிக்கப்பட்ட மூதாட்டி சபையா பீவி, வந்தவாசி அருகே உள்ள சித்தேரி என்ற இடத்திற்குச் சென்று, அங்கு புத்தூர் கட்டு போட்டுக்கொண்டு வீட்டிற்குச் சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: நாயக்கனேரி விவகாரம்; விசிகவினருக்கு கொலை மிரட்டல் கடிதம்.. போலீசில் புகார்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.