திருவண்ணாமலை மாவட்டம் மோட்டூர் கிராமத்தைச் சேர்ந்த சாரங்கபாணி (22) என்பவர் செய்யாறு ஆற்றுப்படுகைகளில் மணல் கடத்தலில் ஈடுபட்டு வந்தார். அதேபோல் எலந்தம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சுதாகர் (45) என்பவர் கள்ளச்சாராயம் விற்பனை செய்து வந்தார்.
பின்னர் இருவரையும் காவல் துறையினர் கைது செய்தனர். மேற்கண்ட இருவரும் தொடர்ந்து சட்டவிரோத செயலில் ஈடுபட்டு வந்ததால், அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.அரவிந்த் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார்.
அதன்படி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, சாரங்கபாணி, சுதாகர் ஆகியோரை குண்டர் சட்டத்தில் கைது செய்து, சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து காவல் துறையினர் குண்டர் சட்டத்தில் இருவரையும் கைது செய்து, வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: போதைப்பொருள்கள் விற்ற நால்வர் மீது பாய்ந்த குண்டர் சட்டம்!