திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கி பத்து நாட்கள் வெகுவிமரிசையாக நடைபெறுகிறது. இந்த பத்து நாட்களும் சாமிகள் நான்கு மாட வீதிகளில் உலா வருவது வழக்கம்.
சாமிஊர்வலத்திற்கு பயன்படுத்தப்படும் குடைகளை பதினைந்தாவது ஆண்டாக அருணாச்சால ஆன்மீக சேவா சங்கம் நேற்று வழங்கியது. பல்லாவரத்திலிருந்து எடுத்துவரப்பட்ட ரூபாய் மூன்று லட்சம் மதிப்பிலான 13குடைகள் நேற்று கோயிலை வந்தடைந்து.
அண்ணாமலையார் கோயில் முன்பு இருந்து மேளதாளங்களுடன் ஊர்வலமாக மாட வீதிகளில் குடைகளை எடுத்துவரப்பட்டது. பின்பு இக்குடைகள் அனைத்தும் அண்ணாமலையார் கோயில் இணை ஆணையர் ஞானசேகரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதையும் படிங்க: திருவண்ணாமலை தீபத்திருவிழா 2019 - தொடங்கியது துர்கை அம்மன் உற்சவம்!