ETV Bharat / state

தோல்வி பயத்தால் எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம்! கம்யூனிஸ்ட் தாக்கு - சட்டப்பேரவை இடைத்தேர்தல்

திருவண்ணாமலை: இடைத்தேர்தலில் தோல்வி அடைந்து விடுவோம் என்ற பயத்தின் காரணமாகவே சட்டப்பேரவை உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்யும் நடவடிக்கையில் சபாநாயகர் ஈடுபட்டுள்ளார் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

k.balakrishnan
author img

By

Published : Apr 30, 2019, 10:36 AM IST

எட்டு வழிச்சாலை சட்டமும் விவசாயிகளாகிய நாம் எதிர்கொள்ளும் சவால்களும் என்கின்ற தலைப்பில் திருவண்ணாமலையில் வேங்கிக்கால் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் கருத்தரங்கம் நடைபெற்றது.

இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது,

'மத்திய மாநில அரசுகள் ஏற்கனவே சென்னை சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்தை நிறைவேற்றுவதாக கூறி இந்த ஐந்து மாவட்டங்களில் மிகக் கொடூரமான அடக்குமுறை கட்டவிழ்த்து விட்டார்கள். அதையெல்லாம் மீறி இந்தப் போராட்டம் உச்சக்கட்டத்தை அடைந்தது.

இப்போது அரசின் அரசாணை பொருத்தமற்றது எனக்கூறி நிலம் கையகப்படுத்த வெளியிடப்பட்ட அரசாணையை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்திருக்கிறது. அதனடிப்படையில் அந்தத் திட்டத்தை அரசு முழுமையாக கைவிட வேண்டும். மீண்டும் எட்டு வழிச்சாலை திட்டத்தை நிறைவேற்ற அரசு செயல்படும் என்று சொன்னால் இந்த மாவட்டங்களில் மீண்டும் விவசாயிகள் தன்னெழுச்சியான போராட்டத்தை நடத்துவார்கள். அதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி துணை நிற்கும்.

தமிழ்நாட்டில் 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்று இருக்கிறது. தேர்தல் நடைபெறும் 22 தொகுதிகளிலும் அதிமுக படுதோல்வி அடைந்து விடும் என்கின்ற ஐயப்பாட்டில், இருக்கிற எண்ணிக்கையை வைத்து தங்களுடைய ஆட்சி அதிகாரத்தை நடத்துவதற்காக அதிமுகவில் இருக்கும் மூன்று சட்டப்பேரவை உறுப்பினர்களை நீக்குவதற்கான நடவடிக்கையை சபாநாயகர் மேற்கொண்டிருக்கிறார்.

கே.பாலகிருஷ்ணன் பேட்டி

மேலும் இரண்டு பேரை நீக்குவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சொல்லியிருக்கிறார். ஒரு சட்டப்பேரவை உறுப்பினரை தகுதி நீக்கம் செய்யவேண்டும் என்று சொன்னால் அதற்கான சட்டத்தின் வரைமுறை இருக்கிறது. சட்டப்பேரவையிலேயே அந்த கட்சியினுடைய கொறடா உத்தரவை மீறும்போதுதான் அவரை பதவி நீக்கம் செய்ய முடியுமே தவிர சட்டப்பேரவைக்கு வெளியே அவர் எவ்வாறு செயல்படுகிறார் என்பது பற்றி சபாநாயகர் தலையிடமுடியாது என்பதால் தகுதி நீக்கம் செய்வதற்கான அதிகாரம் அவருக்கு கிடையாது' என தெரிவித்தார்.

Intro:எட்டு வழி சாலை சட்டமும் விவசாயிகளாகிய நாம் எதிர்கொள்ளும் சவால்களும் என்கின்ற தலைப்பில் திருவண்ணாமலையில் வேங்கிக்கால் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் கருத்தரங்கம் நடைபெற்றது.

Body:எட்டு வழி சாலை சட்டமும் விவசாயிகளாகிய நாம் எதிர்கொள்ளும் சவால்களும் என்கின்ற தலைப்பில் திருவண்ணாமலையில் வேங்கிக்கால் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் கருத்தரங்கம் நடைபெற்றது.

இந்த கருத்தரங்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மாநிலச் செயலாளர் K.பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது,

மத்திய மாநில அரசுகள் ஏற்கனவே சென்னை சேலம் எட்டு வழி சாலை திட்டத்தை நிறைவேற்றுவதாக சொல்லி இந்த ஐந்து மாவட்டங்களில் மிகக் கொடூரமான அடக்குமுறை கட்டவிழ்த்து விட்டார்கள்.

விவசாயிகளையும் சகல மக்களையும் மிரட்டி நிலங்களை கட்டாயப்படுத்தி கையகப்படுத்திய நிலைமையெல்லாம் மேற்கொண்டார்கள்.

பலரை கைது செய்து சிறையில் அடைத்தார்கள். அதையெல்லாம் மீறி இந்த போராட்டம் ஒரு உச்ச கட்டத்தை அடைந்தது.

இப்போது நீதிமன்றத்தில் அரசாங்கத்தினுடைய நடவடிக்கைகள் தவறு அதற்காக அரசாங்கம் வெளியிட்டிருக்கிற அரசாணை பொருத்தமற்றது. எனவே நிலம் கையகப்படுத்த அரசாணையை ரத்து செய்கிறேன் என்று சொல்லி சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்திருக்கிறது.

அதுமட்டுமல்லாமல் விவசாயிகளிடம் கருத்து கேட்பது, வனத்துறை அனுமதி பெறுவது, சுற்றுச்சூழல் அனுமதி பெறுவது இதையெல்லாம் செய்த பிறகுதான் இந்த திட்டங்களை செயல்படுத்த முடியுமே தவிர அவசரகதியில் இதை அனுமதிக்க முடியாது என்று உயர் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு மத்திய மோடி அரசாங்கத்திற்கும் எடப்பாடி அரசாங்கத்திற்கும் கிடைத்திருக்கிற ஒரு குட்டு என்பதை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

அதன் அடிப்படையில் அந்த திட்டத்தை அரசு முழுமையாக கைவிட வேண்டும். மீண்டும் 8 வழி சாலை திட்டத்தை நிறைவேற்ற அரசு செயல்படும் என்று சொன்னால் இந்த மாவட்டங்களில் மீண்டும் விவசாயிகள் தன்னெழுச்சியான போராட்டத்தை நடத்துவார்கள். அதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி துணை நிற்கும் என்று நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

தமிழகத்தில் 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்று இருக்கிறது. தேர்தல் நடைபெறும் 22 தொகுதிகளிலும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் படு தோல்வி அடைந்து விடும் என்கின்ற ஐயப்பாட்டில் இருக்கிற எண்ணிக்கையை வைத்து தங்களுடைய ஆட்சி அதிகாரத்தை நடத்துவதற்காக அதிமுகவில் இருக்கின்ற 3 சட்டமன்ற உறுப்பினர்களை நீக்குவதற்கான நடவடிக்கையை சபாநாயகர் மேற்கொண்டிருக்கிறார்.

மேலும் 2 பேரை நீக்குவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சொல்லியிருக்கிறார். ஒரு சட்டமன்ற உறுப்பினரை தகுதி நீக்கம் செய்யவேண்டும் என்று சொன்னால் அதற்கான சட்டத்தின் வரைமுறை இருக்கிறது. சட்டமன்றத்திலே அந்த கட்சியினுடைய கொறடா உத்தரவை மீறும் போது தான் அவரை பதவி நீக்கம் செய்ய முடியுமே தவிர சட்டமன்றத்திற்கு வெளியே அவர் எவ்வாறு செயல்படுகிறார் என்பது பற்றி சபாநாயகர் தலையிடமுடியாது. தகுதி நீக்கம் செய்வதற்கான அதிகாரம் அவருக்கு கிடையாது என்று தெரிவித்தார்.

Conclusion:எட்டு வழி சாலை சட்டமும் விவசாயிகளாகிய நாம் எதிர்கொள்ளும் சவால்களும் என்கின்ற தலைப்பில் திருவண்ணாமலையில் வேங்கிக்கால் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் கருத்தரங்கம் நடைபெற்றது.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.