திருவண்ணாமலை நகரப்பகுதிகளில் லாட்டரி சீட்டுகள் விற்பனைசெய்யப்படுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதையடுத்து அவரின் உத்தரவின்பேரில் தனிப்படை காவல் துறையினர், நகர காவல்நிலைய எல்லைக்குள்பட்ட பே. கோபுரம் பிரதான சாலை, சமுத்திரம் காலனி, கல் நகர், இரட்டைப் பிள்ளையார் கோயில் தெரு உள்ளிட்ட இடங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
அந்தச் சோதனையில் பேய் கோபுரம் பகுதியைச் சேர்ந்த ராமன், சங்கர், தண்டராம்பட்டு சந்திரசேகர், கல் நகர் பழனி, சமுத்திரம் காலனி கிருஷ்ணன், தச்சம்பட்டு ராஜாராம், ஒத்தவாடை ரமேஷ் ஆகியோர் தடைசெய்யப்பட லாட்டரி சீட்டுகளை விற்றுவந்தது தெரியவந்தது.
அவர்கள் அனைவரையும் கைதுசெய்த காவல் துறையினர் அவர்களிடமிருந்த 12 ஆயிரம் லாட்டரி சீட்டுகள், ரூபாய் 27 ஆயிரத்து 640 ரொக்கம், ஐந்து செல்போன்கள், மூன்று இருசக்கர வாகனங்களைப் பறிமுதல்செய்தனர். தற்போது அவர்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: கோவையில் லாட்டரி சீட்டு வியாபாரி கைது