திருவண்ணாமலையில் உள்ள திருமஞ்சன கோபுரம் வீதியில் கதர் கிராமத் தொழில் மைய உதவி இயக்குநர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இக்கட்டிடத்தின் கீழ்த்தளத்தில் காதி கிராப்ட் விற்பனை நிலையம் செயல்பட்டு வந்தது. 50 ஆண்டு பழமையான இக்கட்டிடத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வந்ததன. இந்நிலையில், கட்டடத்தின் ஒரு பகுதி திடீரென நேற்று சரிந்து விழுந்தது.
![இடிந்து விழுந்த கட்டடத்தின் ஒரு பகுதி](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-tvm-02-khadibuilding-collapse-script-7203277_05082019223254_0508f_1565024574_944.jpg)
இதனையடுத்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த தீயணைப்பு படையினர் மற்றும் காவல்துறையினர் கட்டடத்தின் இடிபாடுகளில் யாரேனும் சிக்கி உள்ளனரா என்று அறிய இடிபாடுகளை அகற்றி வருகின்றனர்.