அரசு ஊழியர்கள் வீட்டின் பூட்டை உடைத்து 20 சவரன் நகை கொள்ளை! - நகை திருட்டு
திருவண்ணாமலை: அரசு ஊழியர்கள் வீட்டின் பூட்டை உடைத்து 20 சவரன் நகையை அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
திருவண்ணாமலை வேங்கிக்கால் பகுதியிலுள்ள செல்வா நகரில் வசிப்பவர்கள் அரசு ஊழியர்களான ராமச்சந்திரன் - மணிமேகலை தம்பதி. வேலைவாய்ப்பு அலுவலகத்தில் துணை இயக்குனராக பணிபுரிந்து வரும் ராமச்சந்திரனுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மருத்துவமனையில் மூன்று நாட்களாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதனால் மூன்று நாட்களாக அவரின் வீடு பூட்டியிருந்தது.
இதனை நோட்டமிட்டு நேற்றிரவு வீட்டின் பூட்டை உடைத்து வீட்டினுள் நுழைந்த கொள்ளையர்கள், பீரோவில் வைக்கப்பட்டிருந்த 20 சவரன் தங்க நகையை கொள்ளையடித்துச் சென்றனர். சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய தம்பதி, வீட்டில் நகைகள் திருடு போனதை அறிந்து அதிர்ச்சியடைந்தனர். பின்னர், சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகாரளித்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், கைரேகை நிபுணர்களின் உதவியோடு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:
Body:அரசு ஊழியர்கள் வீட்டில் வீட்டின் பூட்டை உடைத்து 20 சவரன் நகை கொள்ளை.
திருவண்ணாமலை வேங்கிக்கால் பகுதியில் உள்ள செல்வா நகரில் அரசு ஊழியர்கள் ராமச்சந்திரன், மணிமேகலை. ராமச்சந்திரன் மதுரையில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்தில் துணை இயக்குனராக பணிபுரிந்து வருகிறார். அவரது மனைவி மணிமேகலை கலசபாக்கம் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்கள். இந்நிலையில் ராமச்சந்திரன் அவர்களுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மருத்துவமனையில் மூன்று நாட்களாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில் மூன்று நாட்களாக அவர்கள் வீடு பூட்டி கிடந்தது. இதை நோட்டமிட்ட கொள்ளையர்கள் நேற்று இரவு வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து பீரோவில் வைக்கப்பட்டிருந்த தங்க நகையை கொள்ளையடித்து சென்றனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து கைரேகை பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Conclusion:அரசு ஊழியர்கள் வீட்டில் வீட்டின் பூட்டை உடைத்து 20 சவரன் நகை கொள்ளை.