ETV Bharat / state

நீலகிரிக்கு வருவோருக்கு முகக்கவசம் கட்டாயம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு! - MASK MANDATORY

நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் அனைவருக்கும் முகக்கவசம் கட்டாயம் என மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு அறிவித்துள்ளார்.

நீலகிரி ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு, சுற்றுலா வாகனங்கள்
நீலகிரி ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு, சுற்றுலா வாகனங்கள் (ETV Bharat Tamilnadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 7, 2025, 3:58 PM IST

Updated : Jan 7, 2025, 4:14 PM IST

உதகமண்டலம்: சீனாவில் உருவான HMPV தொற்றால் உலக நாடுகள் அச்சம் அடைந்துள்ளன. கர்நாடக மாநிலம் பெங்களூருவில் 2 குழந்தைகளுக்கு HMPV வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து நாடு முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதன் ஒருபகுதியாக நீலகிரி மாவட்ட எல்லையான கர்நாடகா மற்றும் கேரளா பகுதிகளில் சோதனை சாவடிகள் அமைத்து தமிழ்நாடு சுகாதாரத் துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீலகிரி மாவட்டத்திற்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகள் முகக்கவசம் அணிய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு தெரிவித்தார்.

இது தொடர்பாக உதகையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:

கர்நாடக மற்றும் கேரளா மாநிலங்களில் இருந்து நாள்தோறும் எண்ணற்ற சுற்றுலா பயணிகள் நீலகிரி மாவட்டத்திற்கு வந்து செல்கின்றனர். கர்நாடக மாநிலம் பெங்களூருவில் 2 குழந்தைகளுக்கு HMPV வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், நோய் பரவலை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் நீலகிரி மாவட்டத்தில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளை நீலகிரி மாவட்ட எல்லையான கக்கநல்லா, தாளூர் உட்பட அனைத்து சோதனை சாவடிகளிலும் சுகாதார பணியாளர்களை கொண்டு குழு அமைத்து கண்காணிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்திற்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முக்கவசம் அணிய வேண்டும். மேலும், வரும் பொங்கல் தொடர் விடுமுறைக்கு தமிழ்நாடு மட்டுமல்லாமல், கேரளா, கர்நாடகாவில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிவார்கள். இதற்காக மாவட்டம் நிர்வாகம் சார்பில் போக்குவரத்து நெரிசலை தடுக்க பல்வேறு திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு தெரிவித்தார்.

மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கைகளுக்கு சுற்றுலா பயணிகளும் உரிய ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு கேட்டுக் கொண்டார்.

Last Updated : Jan 7, 2025, 4:14 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.