திருவள்ளூர் மாவட்டம் வில்லிவாக்கம் மண்டலத்துக்குட்பட்ட ஆலத்தூர், பாலவேடு, வெல்லச்சேரி, கரிக்கலபாக்கம் ஆகிய பகுதிகளில் கடந்த 25 ஆண்டுகளாக வசித்துவரும் இருளர் சமுதாயத்தைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் நேற்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமாரை சந்தித்து கோரிக்கை மனுவை கொடுத்தனர்.
அந்த மனுவில் ”கடந்த 25 ஆண்டுகளாக வசித்துவரும் தங்களுக்கு அரசின் பல்வேறு திட்டங்களை பெற அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டும். பள்ளிப் பிள்ளைகளைப் படிக்க வைக்க சாதி சான்றிதழை அவசியம் ஆக்க வேண்டும். எனவே அதை உடனடியாக வழங்க வேண்டும். குடியிருக்க நிலையான வீடு இல்லாததால் தங்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தனர்.
வில்லிவாக்கம் ஒன்றிய கவுன்சிலர் பிரபு இதுகுறித்து கூறும்போது ”அடிப்படை வசதிகள் இல்லாமல் கடந்த 25 ஆண்டுகளாக மிகவும் பின்தங்கிய நிலையில் வசித்துவரும் இந்த மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து சாதி சான்றிதழ் வழங்க வேண்டும். இவர்களுக்கு வீட்டுமனை பட்டா, அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்பட வேண்டும்” என்றார்.
இதையும் படிங்க: 'எங்களை நிரந்தர பணியாளர்களாக நியமிக்க வேண்டும்' - மாநகராட்சி துப்புரவுப் பணியாளர்கள் கோரிக்கை