திருவள்ளூர் மாவட்டத்தில் ஏழை எளியவர்களின் குடும்பத்தில் நிகழும் திருமணத்திற்கு, சமூக நலத்துறையின் கீழ் பயனாளிகளுக்கு, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஆட்சியர் ரவிக்குமார் தலைமையில் உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில், ஊரக தொழில்துறை அமைச்சர் பா.பென்ஜமின், தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்ச்சியில், 1729 பயனாளிகளுக்கு 13 ஆயிரத்து 832 கிராம் தங்கம் உட்பட, மொத்தம் 6 கோடியே 56 லட்சத்து இருபத்தி ஐந்தாயிரம் ரூபாய்க்கு நலத்திட்ட உதவிகள் திருவள்ளூர், பூந்தமல்லி, ஆவடி, கடம்பத்தூர், திருவாலங்காடு, பூண்டி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.
அப்போது பேசிய தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர், உலகின் மிகப்பெரிய நாடுகளான சீனாவும், இந்தியாவும் உலகின் மூன்றில் ஒரு பங்கு மக்கள் தொகையை கொண்டு திகழ்கிறது என்றார். மேலும், மாமல்லபுரத்தில் சீன அதிபர் - இந்தியப் பிரதமர் சந்திப்பு நிகழ உள்ளதால், இந்தியாவிலேயே பாதுகாப்பான பண்பாடு மிக்க பகுதியாக தமிழ்நாடு அடையாளம் கண்டுள்ளது என்று அமைச்சர் பாண்டியராஜன் பெருமிதம் தெரிவித்தார்.
இதையும் படிங்க:
‘திமுக ரவுடிசம் எங்கள் கட்சியில் இல்லை’ - அதிமுக வேட்பாளர் குற்றச்சாட்டு