ETV Bharat / state

கரோனா நேரத்தில் அயராது உழைக்கும் காவலருக்கு விருது வழங்கல்!

திருவள்ளூர்: கரோனா காலகட்டத்தில் உயிரை துச்சமாக நினைத்து சேவை மனப்பான்மையுடன் மக்கள் பணியாற்றிவரும் காவல்துறையினரை கௌரவிக்கும் விதமாக விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

police
police
author img

By

Published : Sep 8, 2020, 8:51 PM IST

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் காவல் துறையினருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு காவல் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.

இதனால் சுகாதாரத்துறை, வருவாய்த்துறையினருடன் இணைந்து பணியாற்றி சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கும் வகையில் தொடர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காவலர்களை கௌரவிக்கும் விதமாக கும்மிடிப்பூண்டி துணை கண்காணிப்பாளர் ரமேஷ் தலைமையில் விருதுகள் வழங்கப்பட்டன.

பின்னர் யோகா கலைமாமணி ராதாகிருஷ்ணன், காவல்துறையினருக்கு உணவு முறைகள், மன அழுத்தத்தைக் குறைக்கும் சில பயிற்சிகளை பயிற்றுவித்தார்.

tiruvallur police has been awarded for their works during corona pandemic
காவல்துறையினருக்கு யோகா பயிற்சி
இந்த நிகழ்ச்சியில் வட்டாட்சியர் கதிர்வேல், வட்டார மருத்துவ அலுவலர் கோவிந்தராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர் வாசு தேவன், ஆய்வாளர் சக்திவேல் ஆகியோர் கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.