திருவள்ளூர் மாவட்டத்தில் கரோனோ வைரஸ் வேகமாக பரவி வருவதையடுத்து அதனை கட்டுப்படுத்தும் நோக்கில், சோழவரம் ஒன்றியத்திற்குட்பட்ட தெற்கு பகுதி திமுக மாதவரம் எம்.எல்.ஏ. சுதர்சனம் ஐந்தாயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 2 கிருமி நாசினி டிராக்டர்களை சுகாதாரத் துறைக்கு வழங்கினார்.
இதனை அவரே முன்வந்து அப்பகுதி முழுவதும் தெளித்து பாதுகாப்பு பணியினை மேற்கொண்டார். மேலும், அப்பகுதி மக்களின் பாதுகாப்பிற்காக மருத்துவ பரிசோதனைகளையும் தொடங்கிவைத்தார்.
இந்நிகழ்வில் திமுக சோழவரம் ஒன்றிய செயலாளர், சோழவரம் ஒன்றிய துணைத் தலைவர், தூய்மைப் பணியாளர்கள், சுகாதாரத் துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க:களத்தில் இறங்கி கிருமிநாசினி தெளித்த ரஜினி ரசிகர்கள்!