ETV Bharat / state

திருவள்ளூரில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி? - Thiruvallur corona sign

திருவள்ளூர்: ஒருவருக்கு கொரோனா அறிகுறி இருக்குமோ என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அவரை மருத்துவர்கள் பலத்த பாதுகாப்புடன் சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கொரோனா வைரஸ் அறிகுறி
கொரோனா வைரஸ் அறிகுறி
author img

By

Published : Mar 9, 2020, 11:47 PM IST

திருவள்ளூரை அடுத்த திருவாலங்காடு ஒன்றியம் மணவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜோதி. இவரது மகன் தினேஷ் (வயது 26). இவர் ஜே.சி.பி இயந்திரம் வைத்து தொழில் செய்துவருகிறார். இந்நிலையில் வேலையின் காரணமாக கடந்த மாதம் தினேஷ் மலேசியாவிற்கு சென்றார். அப்போது அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டதைத் தொடர்ந்து மீண்டும் 28ஆம் தேதியன்று தனது சொந்த ஊரான மணவூருக்கு வந்தார்.

கடந்த இரண்டு நாள்களாக தினேஷுக்கு காய்ச்சல் ஏற்பட்டு உடல் சோர்ந்து காணப்பட்டார். இதற்காக அவர் நேற்று திருவள்ளூரில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சை பெறுவதற்காக சென்றார். அப்போது அவர் மருத்துவரிடம் தான் மலேசியாவிற்கு சென்றதாகவும் அப்போது தனக்கு காய்ச்சல் ஏற்பட்டதாகவும் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து அரசு மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து கொரோனா வைரஸ் தாக்குதல் இருக்குமோ என்ற அசத்தில் அவருக்கு முகக்கவசம் போன்ற பாதுகாப்பு உடை அணிவித்து 108 ஆம்புலன்ஸ் மூலம் அவசரமாக சென்னையில் உள்ள அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கொரோனா வைரஸ் அறிகுறி

இதையும் படிங்க: கொரோனா வைரஸ் - மாணவர்கள் விழிப்புணர்வு ஊர்வலம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.