ETV Bharat / state

திருவாரூரில் வாக்களிப்பதன் அவசியத்தை உணர்த்தும் விழிப்புணர்வு  பேரணி - collector Aananth

திருவாரூர்: வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி பள்ளி மாணவ-மாணவியர் கலந்துகொண்ட விழிப்புணர்வு பேரணியை புதிய ரயில் நிலையத்திலிருந்து மாவட்ட ஆட்சியர் ஆனந்த் கொடியசைத்து தொடங்கிவைத்தார்.

விழிப்புணர்வு பேரணி
author img

By

Published : Mar 21, 2019, 1:30 PM IST

நாடு முழுவதும் நாடாளுமன்றத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில் தமிழ்நாட்டில் 39 தொகுதிகளுக்கான நாடாளுமன்றத் தேர்தல், 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் நாடுமுழுவதும் அமலுக்கு வந்துள்ளன. இந்நிலையில், வாக்காளர்களுக்கு வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சியை அந்ததந்த மாவட்ட நிர்வாகம் சார்பில் தொடர்ந்து நடத்தப்பட்டுவருகிறது.

திருவாரூரில் விழிப்புணர்வு பேரணி

இந்த நிலையில், திருவாரூரில் வாக்காளர்களுக்கு வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு பெரு நடை பேரணியானது புதிய ரயில் நிலையத்தில் நடைபெற்றது. பள்ளி, கல்லுாரி மாணவர்கள் கலந்துகொண்ட இந்த விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் ஆனந்த் இன்று தொடங்கிவைத்தார்.

இதில் மாணவ-மாணவிகள் 100 விழுக்காடு வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறு பேரணியாக முக்கிய நகர்ப்புறம் வழியாக நகராட்சி அலுவலகம் வரை சென்றனர். இந்நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர் முருகதாஸ், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர்.

Intro:திருவாரூரில் வாக்காளர்களுக்கு வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு பெரு நடை பேரணியை மாவட்ட ஆட்சியர் ஆனந்த் தொடங்கி வைத்தார்.

Body:திருவாரூரில் வாக்காளர்களுக்கு வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு பெரு நடை பேரணியை மாவட்ட ஆட்சியர் ஆனந்த் தொடங்கி வைத்தார்.

பாராளுமன்ற பொதுத் தேர்தல் மற்றும் தமிழகத்தில் காலி தொகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ள பதினெட்டு சட்டமன்ற இடைத்தேர்தல் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதி நடைபெற உள்ளது.

தேர்தலில் 100% வாக்காளர்களும் வாக்களித்திட அந்தந்த மாவட்ட நிர்வாகம் சார்பில் தொடர்ந்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் இன்று திருவாரூர் புதிய ரயில் நிலையத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பெரு நடை பேரணியை மாவட்ட ஆட்சியர் ஆனந்த் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இதில் மாணவ-மாணவிகள் 100 சதவீதம் வாக்கு குறித்து விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறு பேரணியாக முக்கிய நகர்ப்புறம் வழியாக நகராட்சி அலுவலகம் வரை சென்றனர்.

இந்நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர் முருகதாஸ்,அரசு அலுவலர்கள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.