ETV Bharat / state

பெண் தீக்குளித்து தற்கொலை: உடலை வாங்க மறுத்த உறவினர்கள் போராட்டம்! - thiruvallur crime news

திருவள்ளூர்: மாதர்பாக்கம் அருகே நிலத்தகராறு காரணமாக பெண்மணி ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதையடுத்து, அவரது உடலை வாங்க மறுத்த உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

protest
protest
author img

By

Published : Aug 11, 2020, 9:04 PM IST

திருவள்ளூர் மாவட்டம் மாதர்பாக்கம் அடுத்த செதில்பாக்கம் ஊராட்சியில் ரோஜா (56) என்பவர் வசித்துவந்துள்ளார். இவரது பிள்ளைகளுக்கும் (மகன், மகள்) உறவினரும் முன்னாள் கவுன்சிலருமான குமார் என்பவருக்கும் நிலத்தகராறு காரணமாக மோதல் ஏற்பட்டுள்ளது.

கடந்த 6ஆம் தேதி ரோஜாவின் மகன், மகள் மீது குமார் தாக்குதல் நடத்தியதாகக் கூறி புகார் அளிக்கப்பட்டது. இதனால் குமார், மைக்கேல், ஆகாஷ், தினேஷ் உள்ளிட்ட சிலர் மீது காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

அதேபோல் பாதிக்கப்பட்ட ரோஜாவின் குடும்பத்தினர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டதால் மனமுடைந்த ரோஜா, கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தீ குளித்தார். தகவல் அறிந்து சம்பவம் இடம் விரைந்த பாதிரிவேடு காவல்துறையினர், உடனடியாக ரோஜாவை மீட்டு சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்ததார்.

ரோஜாவின் இறப்பிற்கு காரணமானவர்களை கைது செய்தால் மட்டுமே சடலத்தை வாங்குவோம் என உறவினர்கள் எச்சரித்துள்ள நிலையில், காவல்துறையினர் விசாரணையை துரிதப்படுத்தாமல் மெத்தனப் போக்குடன் செயல்படுவதால் ஆத்திரமடைந்த உறவினர்கள், உடலை வாங்காமல் மாதர்பாக்கம் சத்தியவேடு சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் சம்பந்தப்பட்டவர்களிடம் உரிய முறையில் விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்யப்படும் என காவல்துறையினர் உறுதி அளித்ததால் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.

இதையும் படிங்க: மது அருந்துவதை கண்டித்ததால் தூக்கிட்டு இளைஞர் தற்கொலை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.