திருவள்ளூர்: திருத்தணி அடுத்த திருவாலங்காடு, அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 1 படிக்கும் 115 மாணவர்கள் மற்றும் கனகம்மாசத்திரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 1 படிக்கும் 130 மாணவர்கள் என இரண்டு பள்ளியில் சேர்த்து மொத்தம் 245 மாணவர்கள் பிளஸ் 1 பயின்று வருகின்றனர்.
இவர்களுக்கு அரசின் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கும் நிகழ்ச்சி அந்தந்த பள்ளி வளாகத்தில் நேற்று நடந்தது.
இந்நிகழ்ச்சிகளில் பங்கேற்ற திருவள்ளூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ராஜேந்திரன் மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.
இதையும் படிங்க: முறைகேடாக நடந்த பத்திர பதிவை ரத்து செய்யக் கோரி விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்