திருவள்ளூர் மாவட்டத்தில் இரண்டாம்கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் காலை தொடங்கி அமைதியான முறையில் நடந்துமுடிந்தது. இரண்டாம்கட்ட வாக்குப்பதிவுக்காக திருவள்ளூரில் 1,174 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. இதில் பதற்றமான வாக்குச்சாவடிகளில் பாதுகாப்புக்காக காவலர்கள் குவிக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், எல்லாபுரம் ஒன்றியத்தில் உள்ள கோமக்கம்பெடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார், காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் ஆகியோர் நேரில் பார்வையிட்டனர்.
இதேபோல, எல்லாபுரம் ஒன்றியத்திற்குள்பட்ட வெங்கல் வாக்குச்சாவடியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து வடக்கு மண்டல காவல் துறை தலைவர் நாகராஜன் பார்வையிட்டார்.
அப்போது, வாக்குச்சாவடியின் அருகே தேவையில்லாமல் ஆட்கள் கூடினால் அவர்களை விரட்டும் படியும் வாக்குச்சாவடியில் எந்தவித பிரச்னையும் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் அங்கிருந்த காவலர்களுக்கு அறிவுரை கூறினர்.
இதையும் படிங்க: சாலை வசதி அமைக்கக் கோரி காரமடை தேர்தல் புறக்கணிப்பு!