ETV Bharat / state

வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ள அறையில் வெளிநபர்கள் நடமாட்டம்: திமுகவினர் புகார்

author img

By

Published : Apr 21, 2021, 11:26 AM IST

திருவள்ளூர்: சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் ஆய்வுசெய்த மாவட்ட ஆட்சியர் பொன்னையாவிடம் ஆன்லைன் வகுப்பு என்ற பெயரில் அந்நிய நபர்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளதாக திமுக வேட்பாளர்கள் புகார் தெரிவித்தனர்.

வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் பொன்னையா

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 சட்டப்பேரவைத் தொகுதிகளில் வாக்குகள் பதிவான இயந்திரங்கள் திருவள்ளூரை அடுத்த பெருமாள்பட்டு கிராமத்தில் இயங்கிவரும் ஸ்ரீராம் கல்லூரி வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்த வளாகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் பொன்னையா நேரில் ஆய்வுசெய்தார்.

அப்போது இந்தக் கல்விக் குழும வளாகத்தில் ஆன்லைன் வகுப்பு என்ற பெயரில் ஆசிரியர்கள் எனச் சொல்லிக்கொண்டு ஏராளமானோர் மடிக்கணினி வைத்துக்கொண்டு சுற்றித்திரிகின்றனர்.

அவர்கள் வருவதைத் தடுத்து நிறுத்தவும், மேலும் பல இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் எனவும், மேலும் இங்கே தங்கியிருந்து பெட்டிகளைப் பாதுகாத்துவரும் பூத் ஏஜெண்டுகளுக்குத் தேவையான வசதிகளைச் செய்துதர வேண்டும் எனப் பல்வேறு கோரிக்கைகளை திமுக வேட்பாளர்கள் வி.ஜி. ராஜேந்திரன், ஆவடி நாசர், பூந்தமல்லி கிருஷ்ணசாமி, மாதவரம் சுதர்சனம் ஆகியோர் முன்வைத்தனர்.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் பொன்னையா கூறும்போது,

"தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை மே 2ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறை பாதுகாப்பாக உள்ளதா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து இன்று நேரில் ஆய்வுசெய்தேன், அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக உள்ளன.

வேட்பாளர்கள் சிலர், இந்தக் கல்விக் குழுமத்தின் ஆன்லைன் வகுப்பு எடுக்கவரும் ஆசிரியர் குறித்து சந்தேகம் கொண்டு அவர்களை வரக்கூடாது என வலியுறுத்துகின்றன. இது குறித்து இந்தக் கல்விக்குழு நிர்வாகத்திடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் இங்கு உள்ள பூத் ஏஜெண்டுகளுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டுவருகின்றன. கூடுதல் வசதிகள் கேட்டால் அதற்கான ஏற்பாடுகளும் செய்து தரப்படும். எவ்வித இடையூறும் எவ்வித இன்னலும் இல்லாமல் நல்ல முறையில் வாக்குகள் எண்ணப்பட வேண்டும்" என்றார்.

இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன், மாவட்ட வருவாய் அலுவலர் முத்துசாமி உள்ளிட்ட ஏராளமான அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: தேர்தல் விதிமீறல்: அண்ணா, கருணாநிதி சிலைகள் திறப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.