ETV Bharat / state

'தேர்தல் காலம் என்பதால் 20 விழுக்காடு இடஒதுக்கீடு கேட்டுப் போராட்டம் நடைபெறுகிறது'- இல. கணேசன்

தேர்தல் காலம் என்பதால், வன்னியர்களுக்கு 20 விழுக்காடு தனி இடஒதுக்கீடு கேட்டு பாமக போராட்டம் நடத்திவருவதாக பாஜக மூத்த தலைவர் இல. கணேசன் தெரிவித்துள்ளார்.

ila ganeshan
'தேர்தல் காலம் என்பதால் 20 விழுக்காடு இடஒதுக்கீடு கேட்டுப் போராட்டம் நடைபெறுகிறது'- இல. கணேசன்
author img

By

Published : Dec 21, 2020, 5:42 PM IST

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த ஆத்துபாக்கத்தில் புதிய வேளாண் சட்டங்களை விளக்கும் கூட்டம் நடைபெற்றது.

இதில், பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் கலந்துகொண்டு வேளாண் சட்டங்கள் குறித்து விளக்கினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரிசி, கோதுமை ஆகியவை அத்தியாவசியப் பட்டியலில் இருந்து நீக்கப்ப்டடுள்ளதால் விவசாயிகள் சுதந்திரமாக யாருக்கு வேண்டுமானாலும் அதனை விற்கலாம் என்றும் ஏற்றுமதி செய்து பெரும் பணக்காரர்கள் ஆவதற்கு வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்தார்.

'தேர்தல் காலம் என்பதால் 20 விழுக்காடு இடஒதுக்கீடு கேட்டுப் போராட்டம் நடைபெறுகிறது'- இல. கணேசன்

தேர்தல் காலங்களில் போட்டியிடும் வேட்பாளர்களின் சாதி, அவர்கள் கொடுக்கும் இலவசத்தை மட்டும் பார்க்கும் மக்கள் தேர்தல் அறிக்கைகளைப் படிப்பதில்ல என குற்றஞ்சாட்டிய அவர், தேர்தல் அறிக்கையில் சொன்னவற்றைத்தான் பாஜக சட்டமாக நிறைவேற்றிவருவதாக தெரிவித்தார்.

மேலும், தேர்தல் காலம் என்பதால் பாமக தலைவர் ராமதாஸ் 20 விழுக்காடு இடஒதுக்கீடு கேட்டுப் போராடுவதாக கூறிய அவர், ராஜிவ்காந்திப் படுகொலை என்பது இந்திய இறையாண்மைக்கு விடுக்கப்பட்ட சவால் என்பதால், ஏழு தமிழர்களின் விடுதலை தாமதமாகிறது என்றார்.

இதையும் படிங்க: 'டெல்லி போராட்டத்தில் சமூக விரோதிகள் புகுந்திருக்கிறார்கள்'- இல. கணேசன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.