ETV Bharat / state

வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த செம்மரக் கட்டைகள், புலி பற்கள் பறிமுதல் - இளைஞர் கைது - தமிழ் குற்றச் செய்திகள்

திருவள்ளூர்: செங்குன்றம் அருகே வீடு ஒன்றில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த ஒரு டன் செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்த காவல் துறையினர், இது தொடர்பாக ஒருவரை கைது செய்துள்ளனர்.

seizure-of-red-sandal-wood-and-tiger-teeth-stored-in-the-house-youth-arrested

author img

By

Published : Jan 15, 2021, 2:34 PM IST

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகேவுள்ள பாடியநல்லூர் பி.டி.மூர்த்தி நகரில் உள்ள வீடு ஒன்றில் சட்டவிரோதமாக செம்மரக் கட்டைகள் உள்ளிட்ட கடத்த பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக திருவள்ளூர் வனத்துறை அலுவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இத்தகவலின் பேரில் வனச்சரகர் கிருஷ்ணகுமார் தலைமையில் வனத்துறையினர் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கிருந்த வீடு ஒன்றில் ஒரு டன் செம்மரக் கட்டைகள், 20 புலி பற்கள், 25 கிலோ எறும்பு திண்ணி செதில்கள் ஆகியவை பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

வீட்டில் பதுக்கி வைக்கைப்பட்டிருந்த செம்மரக்கட்டைகள், புலி பற்கள் பறிமுதல்

இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த வனத்துறையினர், இதுதொடர்பாக அரவிந்தன் (25) என்பவரை கைது செய்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் அந்த இளைஞரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: 11 திருமணங்கள், கூட்டுப் பாலியல், ஆபாசப் படம் எடுத்தல்... எப்படி சிக்கினார் 22 வயது இளைஞர்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.