திருவள்ளூர் அடுத்த புல்லரம்பாக்கம் பகுதியை;ச சேர்ந்தவர் சிவமணி(44). பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். இவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த கல்லூரியில் 2 ஆம் ஆண்டு பயிலும் மாணவி சினேகா(19) என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மாணவி சினேகா காணாமல் போனதாக அவர் தந்தை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதையடுத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் சிவமணி சினேகாவைத் திருமணம் செய்து கொண்டு வேளாங்கண்ணியில் பதுங்கியிருப்பது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து காவல்துறையினர் சிவமணி, மாணவி சினேகா ஆகிய இருவரையும் காவல்நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி சிவமணியை கைது செய்தனர். திருமணமாகி 10 வயதில் மகன் உள்ள நிலையில் 44 வயதுடைய பைனான்சியர் 19 வயதுடைய இளம் பெண்ணை திருமணம் செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.