தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக கரோனா தொற்றின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்கிறது. முகக் கவசம், தகுந்த இடைவெளி ஆகிய பாதுகாப்பு நடவடிக்கைகளை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில் திருவள்ளூர் மாவட்ட மக்களுக்கு கரோனா நோய்த் தொற்று குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருவாலங்காடு ஒன்றியம் பெரியகளக்காட்டூர் ஊராட்சியில் உள்ள சிறுவர்கள் ஒன்றிணைந்து நாடகம் ஒன்றை நடத்தியுள்ளனர்.
இதில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்ட பெரியகளக்காட்டூர் ஊராட்சி மன்றத் தலைவர் மணிமேகலை நந்தகுமார், நாடகத்தில் சிறப்பாக நடித்த அனைத்து சிறுவர்களுக்கும் பரிசு வழங்கி பாராட்டினார்.
நாடகக் கதாபாத்திரங்கள்
கதாநாயகன் - மூன்றாம் வகுப்பு படிக்கும் தமிழ்,
கதாநாயகி (மாறுவேடம்) - ராகுல்,
மகன் கதாபாத்திரத்திரம் - குகன்,
காவல்துறை ஆய்வாளர் - எட்டாம் வகுப்பு படிக்கும் ஜீவா,
உதவி ஆய்வாளர் - ஏழாம் வகுப்பு படிக்கும் யோகேஷ்,
மருத்துவர் - கவின்,
செவிலியர் - கனிஷ்கா,
எமதர்மன் - ஐந்தாம் வகுப்பு படிக்கும் தருண்,
சித்திரகுப்தன் - கவிஷ்,
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் - பன்னிரண்டாம் வகுப்பு மாணவன் சூரியப் பிரகாஷ் ஆகியோர் சிறப்பாக நடித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இவர்களின் இந்த முயற்சிக்கு அப்பகுதி மக்கள் தங்களது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளனர்.